இந்திய அணியில் முகமது ஷமியின் இடத்தை இனி இவர்தான் பூர்த்தி செய்யணும் – இர்பான் பதான் கருத்து

Pathan and Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். அதோடு தற்போது 35 வயதான அவரை வயதினை காரணம் காட்டியும் இந்திய அணியின் நிர்வாகம் நிராகரித்து வருகிறது. இளம் வீரர்களை வளர்த்தெடுக்கிறோம் என்கிற பெயரில் அனுபவ வீரரான முகமது ஷமியின் திறனை இந்திய அணியின் நிர்வாகம் வீணடித்து வருவதாகவும் சிலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

முகமது ஷமியின் இடத்தை அவர்தான் பூர்த்தி செய்யனும் : இர்பான் பதான் கருத்து

அதோடு டெஸ்ட் போட்டிகளிலும் முகமது ஷமியை கடந்து அடுத்த கட்ட வீரர்களை நோக்கி நிர்வாகம் சென்று விட்டது. இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலாவது முகமது ஷமி கம்பேக் கொடுப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் முகமது ஷமிக்கு இடம் வழங்கப்படாதது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முகமது ஷமியின் கரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே தெரிகிறது.

ஏனெனில் இந்திய அணியின் நிர்வாகம் முகமது ஷமியை தாண்டி இளம் வேகப்பந்து வீச்சாளர்களை நோக்கி நகர்ந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இனி இந்திய அணியில் முகமது ஷமியின் ரோலை முகமது சிராஜ் தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இடைவெளி உள்ளது. எனவே இப்போதிலிருந்தே இந்திய அணியை பலப்படுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் முகமது ஷமியின் இடத்தை பூர்த்தி செய்ய முகமது சிராஜ் தான் சரியான தேர்வாக இருப்பார்.

இதையும் படிங்க : அவரோட எதிர்காலம் என்ன? முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்த – இர்பான் பதான்

ஏனெனில் முகமது சிராஜ் தற்போது அனுபவ வீரர்களின் பட்டியலில் இணைந்து விட்டார். டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீசும் அவரால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீச முடியும். எனவே முகமது ஷமியின் ரோலை அவர்தான் அடுத்த உலக கோப்பை தொடரில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதாக இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement