அவரோட எதிர்காலம் என்ன? முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்த – இர்பான் பதான்

Irfan Pathan and Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். அதோடு இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியிருந்த அவர் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் இணைந்து பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் காயமடைந்தது அவரது கரியருக்கே ஒரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முகமது ஷமியின் எதிர்காலம் தான் என்ன? : இர்பான் பதான் ஆதங்கம்

ஏனெனில் அவர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதேபோன்று டி20 போட்டிகளில் விளையாடி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளிலாவது முகமது ஷமி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது ஒருநாள் கரியரும் முடிவுக்கு வந்துவிடும் போல் தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 35 வயதாகும் முகமது ஷமி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது 37 வயதை எட்டிவிடுவார். எனவே அவரது ஒருநாள் கரியரும் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறலாம்.

இந்நிலையில் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி வரும் அவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்யும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதும் அவருக்கு அந்த அணியில் இடம் கிடைக்காது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் முகமது ஷமி இந்த நியூசிலாந்து தொடரில் இடம் பெறாதது குறித்து ஆதங்கத்தை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியதாவது : உண்மையிலேயே இந்த இந்திய அணித்தேர்வை பொருத்தவரை முகமது ஷமி இடம்பெறாதது மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் அவருடைய எதிர்காலம் இனி என்ன ஆகப்போகிறது? என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க : ஒன்டே கிரிக்கெட்டில் சச்சின், கோலியை விட.. இந்த காரணத்தால் தோனி, யுவி, ரெய்னா சிறந்தவர்கள்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

ஏனெனில் முகமது ஷமி ஒன்றும் நேற்று அணிக்குள் வந்து ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியவர் கிடையாது. அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். அவரைப் போன்ற ஒரு அனுபவ வீரருக்கு வாய்ப்புகள் என்பது மிகவும் அவசியம். ஆனால் அவரது காயம் மற்றும் வயதை காண்பித்து தொடர்ச்சியாக நிராகரித்து வருவது தவறு என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement