ஒன்டே கிரிக்கெட்டில் சச்சின், கோலியை விட.. இந்த காரணத்தால் தோனி, யுவி, ரெய்னா சிறந்தவர்கள்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் அவர் 2027 உலகக்கோப்பையில் களமிறங்கி வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளார். முன்னதாக 2021 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட்டை ஆகியோரைக் காட்டிலும் விராட் கோலி அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்து அசத்தலாக விளையாடினர்.

ஆனால் அதற்குப்பின் தடுமாற்றமாக விளையாடிய அவர் 2025இல் ஓய்வு பெற்றார். மறுபுறம் 2021க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் ஜோ ரூட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் அசத்தி வருகிறார். அதைப் பார்க்கும் போதெல்லாம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்காமலேயே ஓய்வு பெற்றது ஏமாற்றத்தைக் கொடுப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் சமீபத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

டாப் ஆர்டர் விட:

அத்துடன் விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இருப்பதிலேயே ஒருநாள் போட்டிகள் தான் மிகவும் எளிதான ஃபார்மட் என்றும் அவர் கூறினார். எனவே கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்காமல் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு பதில் விராட் கோலி மொத்தமாக ஓய்வு பெற்றிருக்கலாம் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அதற்கு வழக்கம் போல விராட் கோலி ரசிகர்கள் அவரை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மிகவும் எளிதான டாப் ஆர்டரில் போன்றவர்கள் விளையாடியதாக மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே கடினமான மிடில் ஆர்டரில் விளையாடிய தோனி, யுவராஜ் சிங், ரெய்னா போன்றவர்கள் தான் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மிடில் ஆர்டர் கடினமானது:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் போதுமான நல்ல வீரராக இருந்தால் முதல் 10 – 15 ஓவர்களில் விளையாடுவீர்கள். 10 ஓவர்களுக்குப் பின் ஃபீல்டர்கள் மெதுவாக மைதானம் முழுவதும் விரித்து நிறுத்தப்படுவார்கள். அப்போது நீங்கள் ஸ்ட்ரைக்கை நன்றாக மாற்றக்கூடியவராக இருந்தால் சதமடிக்கலாம். ஒருநாள் கிரிக்கெட்ரில் யுவராஜ் சிங், ரெய்னா அல்லது தோனி போன்றவர்கள் விளையாடிய 4, 5, 6 இடங்களே பேட்டிங் செய்வதற்கு கடினமான இடங்களாகும்”

இதையும் படிங்க: இந்தியா – நியூஸிலாந்து முதல் ஒன்டே நடக்கும் வதோதரா மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“எனவே வரலாற்றில் மகத்தான பேட்ஸ்மேன்களை தேடினால் அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்க மாட்டார்கள். குறிப்பாக 1, 2, 3 ஆகிய இடங்களில் கிடைக்க மாட்டார்கள். என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருப்பதற்கு கடைசி இடமாக நான் ஒருநாள் கிரிக்கெட்டை பார்க்கிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 3 இடங்களில் விளையாடுபவர்களுக்கு இது மிக அதிகமாகவே நடக்கிறது” என்று கூறினார்.

Advertisement