
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்ற வேளையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியானது பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில் இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து பெஸ்ட் 12 வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த அணியில் : துவக்க வீரர்களாக ஆர்.சி.பி அணியை சேர்ந்த துவக்க வீரர் விராட் கோலி மற்றும் குஜராத் அணியை சேர்ந்த துவக்க வீரர் சாய் சுதர்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி இந்த தொடரில் 657 ரன்களையும், சாய் சுதர்சன் 759 ரன்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் (538 ரன்கள்), ஷ்ரேயாஸ் ஐயர் (604 ரன்கள்) என அவர்கள் இருவரும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர். ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் யாதவும் (717 ரன்கள்), ஆறாவது இடத்தில் ஹென்றிச் கிளாஸன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஏழாவது இடத்தில் நமன் தீரையும், எட்டாவது இடத்தில் க்ருனால் பாண்டியாவையும் தேர்வு செய்துள்ளார்.
மேலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக நூர் அகமதுவை சேர்த்துள்ளார். மீதமுள்ள மூன்று இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜாஷ் ஹேசல்வுட் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை சேர்த்துள்ளார். அதன்படி இர்ஃபான் பதான் வெளியிட்டுள்ள 2025 ஐபிஎல் தொடருக்கான பெஸ்ட் 12 பேர் கொண்ட வீரர்களின் லிஸ்ட் இதோ :
இதையும் படிங்க : 2014 போட்டித்தன்மை காணல.. விராட் கோலி திடீர்னு ரிட்டையராக கோபமே காரணம்.. மார்க் டெய்லர் பேட்டி
1) விராட் கோலி, 2) சாய் சுதர்சன், 3) ஜாஸ் பட்லர், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சூரியகுமார் யாதவ், 6) ஹென்றிச் கிளாஸன், 7) நமன் தீர், 8) க்ருனால் பாண்டியா, 9) நூர் அகமது, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) ஜாஷ் ஹேசல்வுட், 12) பிரசித் கிருஷ்ணா.