- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டியாவை குறை சொல்லக்கூடாது.. இதனால் தான் கிரேக் சேப்பல் ரூட் வேலை செய்யல.. இர்பான் பதான்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளனர். ஆனால் அதில் சிவம் துபே 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பந்து வீசவில்லை. எனவே இந்திய அணிக்காக அவர் பந்து வீசுவரா? அப்படியே வீசினாலும் எத்தகைய ஃபார்மில் இருக்கிறார்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அதே போல மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கவலையை கொடுப்பதாக அமைந்துள்ளது. இவர்களை நம்பி பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் ஆகிய 3 முழு நேர வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் 2024 தொடரில் சுமாராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை இனிமேலும் குறை சொல்லாமல் அனைத்து இந்திய வீரர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

- Advertisement -

சேப்பல் வழி:
2007இல் அதை செய்ய முயற்சித்த காரணத்தாலேயே கிரேக் சேப்பல் இந்திய அணியில் தோல்வியை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நடந்தது நடந்து முடிந்து விட்டது. இப்போது இந்தியாவுக்காக நீங்கள் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும். ஆல் ரவுண்டரான நீங்கள் முக்கிய வேலையை செய்கிறீர்கள்”

“ஹர்டிக் மற்றும் துபேவை தவிர்த்து நாம் வெறும் 3 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளோம். எனவே முக்கிய நேரங்களில் அவர்களுடைய 3 – 4 ஓவர்கள் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக பாண்டியாவை தேர்ந்தெடுப்பது வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் பகல் நேர போட்டிகளில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னரை தேர்ந்தெடுக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்”

- Advertisement -

“எனவே இந்திய அணிக்காக நம்மாலும் பங்காற்ற முடியும் என்று பாண்டியா நம்ப வேண்டும். அதற்கு அவருடைய ஐபிஎல் செயல்பாடுகள் பற்றிய பேச்சுக்கள் இங்கே ஒருமுறை கூட வரக்கூடாது. ஆஸ்திரேலியா எப்போதும் நட்சத்திர கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் நாம் கொண்டுள்ளோம். நான் அந்த இரண்டுக்குமிடையே சமநிலை இருப்பதை விரும்புகிறேன். ஏனெனில் இந்தியர்களான நமக்கு வித்தியாசமான மனநிலை இருக்கும்”

இதையும் படிங்க: விராட் கோலி கிரேட் பிளேயர் தான்.. ஆனா இந்தியா ஜெய்க்கனும்ன்னா இதை செய்யணும்.. கங்குலி கருத்து

“கிரேக் சேப்பல் வந்த போது அவருடைய எண்ணங்கள் தெளிவானதாக இருந்தது. அவர் இந்திய கிரிக்கெட்டை உயரத்துக்கு கொண்டு செல்ல விரும்பினார். அதனால் அவர் அனைத்து வீரர்களையும் ஒரே வழியில் சமமாக நடத்தினார். ஆனால் ஆஸ்திரேலியரான அவருடைய அணுகுமுறை இந்தியாவில் வேலை செய்யவில்லை. அவர் மீது நான் பெரிய மரியாதையை கொண்டுள்ளேன். அதனால் உங்களுடைய இந்த அணுகுமுறை இந்தியாவில் வளராது, வேலை செய்யாது என்று அவரிடம் நான் நேரடியாகவும் கூறியுள்ளேன்” எனக் கூறினார்.

- Advertisement -