மிட்சேல் ஸ்டார்க்கின் 24.75 கோடி சாதனையை.. நம்ம இந்திய வீரர் உடைக்க போறாரு.. இர்பான் பதான்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. அந்த ஏலத்தில் ஏராளமான வீரர்கள் உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்க உள்ளார்கள். இம்முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதால் நட்சத்திர வீரர்கள் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அதனால் ஐபிஎல் தொடரில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிக்காக கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

ஸ்டார்க் சாதனை:

அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். இந்திய ஜாம்பவான்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி கூட வரலாற்றில் 20 கோடிகளை சம்பளமாக பெற்றதில்லை. இந்நிலையில் இந்த வருட ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் மிகப்பெரிய தொகைக்கு விலை போவார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

எனவே ஸ்டார்க் சாதனையை அவர் உடைப்பார் என்று பதான் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மிட்சேல் ஸ்டார்க்கின் ஐபிஎல் ஏலம் சாதனை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஏனெனில் ரிஷப் பண்ட் அதை உடைப்பதற்காக தயாராக உள்ளார்” என்று கூறினார். அறிமுகமானது முதல் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் இதுவரை 3284 ரன்களை 148.93 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார்.

- Advertisement -

பதான் நம்பிக்கை:

மேலும் ஒரு சதத்தை அடித்துள்ள அவர் 18 அரை சதங்கள் அடித்துள்ளார். 2018ஆம் ஆண்டு எமர்ஜிங் பிளேயர் விருதையும் ரிஷப் பண்ட் வென்று சாதனை படைத்துள்ளார். சமீபத்திய வருடங்களில் கேப்டனாகவும் செயல்பட்ட அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி தரமான வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க: விராட் கோலியை நினச்சு இல்ல.. ஆஸ்திரேலியாவை நினைச்சு தான் நான் கவலைப்படுறேன்.. வார்னர் பேட்டி

அதனால் அவரை டெல்லி அணி நிர்வாகம் தக்க வைப்பதற்காக விரும்பியது. இருப்பினும் ஏலத்தில் அதிக சம்பளத்தை பெறுவதற்காக ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலகியுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்ஷிப் செய்த அனுபவமும் கொண்டுள்ள அவர் குறைந்தது 15 கோடிக்கு மேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டார்க்கை முந்தி ரிஷப் பண்ட் 25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக இர்பான் பதான் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement