விராட் கோலியை நினச்சு இல்ல.. ஆஸ்திரேலியாவை நினைச்சு தான் நான் கவலைப்படுறேன்.. வார்னர் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணிக்காக விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஏனெனில் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

முன்னதாக கடந்த 5 வருடங்களில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ள விராட் கோலியின் ஃபார்ம் கவலையை கொடுப்பதாக ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் உண்மையில் விராட் கோலியை நினைத்து தாம் கவலைப்படவில்லை என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். ஏனெனில் அழுத்தத்தில் உள்ள விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு அதிரடி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக வார்னர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வார்னர் நம்பிக்கை:

எனவே ஆஸ்திரேலிய அணியை நினைத்து தான் தாம் கவலைப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் விராட் கோலியை பற்றி கவலைப்படுகிறேன். ஆனால் மற்றவர்கள் சொல்லும் காரணங்களுக்காக அல்ல. இந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்ததால் விராட் கோலி முடிந்து விட்டதாக மக்கள் எழுதுகிறார்கள்”

“ஆனால் உண்மையில் நான் ஆஸ்திரேலியாவுக்காக கவலைப்படுகிறேன். இது பார்டர் – கவாஸ்கர் கோப்பை. இங்கே விராட் கோலி எப்போதும் ஆஸ்திரேலியாவில் அடியெடுத்து வைப்பது எங்களுக்கு தெரியும். அவர் எப்போதும் இங்கே சவாலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். அவர் வெளியே வந்து விமர்சகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது”

- Advertisement -

விராட் கோலி அசத்துவார்:

“அதற்காக அவர் இங்கே வந்து சில ரன்கள் குவிக்கப் போகிறார். அதற்காக நான் ஆஸ்திரேலிய அணியை நினைத்து கவலைப்படுகிறேன். எனவே ஆஸ்திரேலியாவின் நன்மைக்காக அவர் இங்கே சிறப்பாக விளையாடக்கூடாது என்று தான் நான் விரும்புகிறேன். ஆனாலும் அவர் இங்கே தன்னை நிரூபிப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே சமயம் விராட் கோலி இதற்கு முன் இது போன்ற சரிவை சந்தித்ததில்லை”

இதையும் படிங்க: ஆஸியை இந்தியா வீழ்த்துவது அசாத்தியம் கிடையாது.. ஆனா கஷ்டம்.. அந்த 3 பேர் அசத்தனும்.. யுவராஜ் பேட்டி

“36 வயது காரணமாக அவர் தடுமாறலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரைப் போன்ற வீரர்கள் வறண்ட காலங்களை கடந்து மீண்டும் வெளியே வருவார்கள். இது ஆஸ்திரேலியாவில் விராட் கோலி கடைசியாக விளையாடும் தொடராக இருக்கக்கூடும். எனவே இது அவரை நாம் கடைசியாக ரசிக்க வேண்டிய நேரம்” என்று கூறினார்.

Advertisement