ஆஸியை இந்தியா வீழ்த்துவது அசாத்தியம் கிடையாது.. ஆனா கஷ்டம்.. அந்த 3 பேர் அசத்தனும்.. யுவராஜ் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் அத்தொடரில் 4 போட்டிகளை வென்று இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லுமா என்ற எதிர்பார்த்து காணப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் மீண்டும் வீழ்த்துவது அசாத்தியம் கிடையாது என்றாலும் மிகவும் கடினம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஜெய்ஸ்வால் உள்ளிட்ட துவக்க வீரர்கள் அசத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பும்ரா அதிகமான விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் மனதளவில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களே இந்த தொடரை வெல்வார்கள் என்றும் யுவராஜ் கணித்துள்ளார். இந்த தொடர் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

யுவராஜ் ஆதரவு:

“ஜெய்ஸ்வால் சிறந்த திறமை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் பெரிய சோதனையாக இருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலியாவில் பவுன்ஸை அட்டாக் செய்தால் அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடியும். சர்பராஸ் கானுக்கும் அது பொருந்தும். ஆஸ்திரேலியா உங்களை ஷார்ட் பந்துகளை வைத்து அட்டாக் செய்யும். அவர்கள் உங்களை டாமினேட் செய்ய முயற்சிப்பார்கள்”

“எனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் கடந்த காலங்களில் 2 முறை வென்றுள்ளீர்கள். எனவே மீண்டும் அதை நீங்கள் செய்யாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் அதற்கு துவக்க வீரர்கள் நெருப்பாக விளையாட வேண்டும். ஜஸ்ப்ரித் பும்ரா விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். நான் இந்தியா வெல்வதையே விரும்புகிறேன்”

- Advertisement -

இந்தியா வெல்லும்:

“ஆனால் ஆஸ்திரேலியாவும் நம்மை வீழ்த்த தயாராக இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். அதன் பின் அவர்கள் டி20 அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. தொடர்ந்து 5 கடினமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அனுபவமில்லாத அந்த பையனை ஆஸியில் விளையாட வைப்பது.. இந்தியாவுக்கு ஆபத்து.. எச்சரித்த முன்னாள் வீரர்

“இருப்பினும் இப்போதுள்ள வீரர்கள் அதற்கு தயாராக இருப்பார்கள். அந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மனதளவில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி உங்களுடைய உடல் சோர்வாக இருக்கக்கூடும். அடிலெய்ட் போலவே பெர்த் மைதானம் வெப்பமாக இருக்கும். ஆஸ்திரேலிய முழுவதுமே அப்படி இருக்கும். எனவே மனதளவில் தயாராக இருக்கும் அணியே இந்தத் தொடரை வெல்வார்கள்” என்று கூறினார்.

Advertisement