அனுபவமில்லாத அந்த பையனை ஆஸியில் விளையாட வைப்பது.. இந்தியாவுக்கு ஆபத்து.. எச்சரித்த முன்னாள் வீரர்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அந்த தொடரில் இந்தியா 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரில் துருவ் ஜுரேல், நிதிஷ் ரெட்டி அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் வேகத்திற்கு சாதகமான மைதானங்கள் இருப்பது வழக்கமாகும். அங்கே அசத்துவதற்கு ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருப்பது வழக்கமாகும். அது போன்ற சூழ்நிலையில் தற்போதைய அணியில் நித்திஷ் ரெட்டி மட்டுமே ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை முதல் போட்டியில் அறிமுகமாக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

- Advertisement -

அவசரம் வேண்டாம்:

இந்நிலையில் நித்திஷ் ரெட்டியை அவசரப்பட்டு ஆஸ்திரேலியாவில் களமிறக்குவது இந்திய அணிக்கு ஆபத்தைக் கொடுக்கும் என்று முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் எச்சரித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒன்று முழுமையான பவுலரை தேர்ந்தெடுங்கள் அல்லது முழுமையான பேட்ஸ்மேனை தேர்ந்தெடுங்கள்”

“நித்திஷ் ரெட்டியை வேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறக்குவது எந்த பயனையும் கொடுக்காது. ஏனெனில் கிரிக்கெட்டில் நீண்ட வடிவத்தில் விளையாடுவதற்கு அவர் இன்னும் தயாராக இல்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த ஒரு ஐபிஎல் தொடரில் மட்டுமே நித்திஸ் ரெட்டி சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகி நன்றாக விளையாடினார். ஆனால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் கூட அவர் அறிமுகமாகி விளையாடவில்லை.

- Advertisement -

அனுபவமற்ற நிதிஷ்:

5 நாட்கள் விளையாட வேண்டிய டெஸ்ட் போட்டிகள் மிகவும் சவாலானது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சமீபத்தில் இந்தியா ஏ அணிக்காக அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடினார். அந்த வாய்ப்பில் தடுமாற்றமாகவே பேட்டிங் செய்த அவர் 4 இன்னிங்ஸில் வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே போல பந்து வீச்சில் வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்து தடுமாற்றமாக செயல்பட்டார்.

இதையும் படிங்க: நான் ரோஹித்தா இருந்திருந்தா இதையே செஞ்சுருப்பேன்.. வலிக்கும் போது தான் இந்தியா அடிப்பாங்க.. டிராவிஸ் ஹெட்

21 வயதாகும் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் வெறும் 779 ரன்கள் மற்றும் 56 விக்கெட்டுகளை 23 போட்டிகளில் எடுத்துள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை பெரிய அனுபவம் இல்லாதவராகவே இருந்து வருகிறார். எனவே அவரை சவாலான ஆஸ்திரேலியாவில் அறிமுகமாக விளையாட வைப்பது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கலாம்.

Advertisement