10 வருஷத்துக்கு முன்னாடி இருந்த தோனி இப்போது இல்லை – வெளிப்படையாக பேசிய இர்பான் பதான்

irfan

எப்போதும் இல்லாத வகையில் இந்த வருட ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மோசமான தொடராக அமைந்து விட்டது. இதுவரை ஆடிய ஐபிஎல் தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற சாதனையை தவறவிட்டு விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை 11 ஐபிஎல் தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு சென்று சாதனை படைத்திருந்தது.

இந்த முறை அதனை செய்ய முடியவில்லை. அதனை தவற விட்டுவிட்டார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு தோனி தற்போது 2020ஆம் ஆண்டில் தோனியை பார்த்து என்ன கூறுவார் என்பது குறித்து இர்பான் பதான் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்….

2011 ஆம் ஆண்டு தோனி, 2020 ஆம் ஆண்டு தோனியை பார்த்தால் உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டு அடுத்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறுவார். மேலும், இப்படிக் கூறிய இர்பான் பதான் லேசாக தோனியை சீண்டியிருக்கிறார்.

Dhoni-1

இந்த வருட ஐபிஎல் தொடரில் தோனியால் சரியாக ஆட முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி பேசியவர், அவரது உடல் தகுதி போய்விட்டது குண்டாக மாறிவிட்டார் என்றும் மறைமுகமாக கூறினார்.

- Advertisement -

இந்த நேரத்தில்தான் தோனி நிச்சயமாக இந்த வருடம் ஓய்வு பெறப் போவதில்லை இன்னும் சில மாதங்கள் தான் இருக்கிறது. அடுத்த வருட ஐபிஎல் தொடர் விளையாடுவதற்கு இதன் காரணமாக அடுத்த வருடம் கண்டிப்பாக வருவேன் என்று தெரிவித்திருக்கிறார் தோனி.