உங்களால என்னோட கண்ணு போயிருக்கும்.. 2007 பின்னணியை ஆதாரத்துடன் பகிர்ந்து பாகிஸ்தானை விளாசிய பதான்

Irfan Pathan 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் 2 வாரங்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியான 4 வெற்றிகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை தொடர்ந்து 8வது முறையாக வென்று சாதனை படைத்தது.

முன்னதாக இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் மைதானங்கள் சரியில்லை, வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகின்றனர். குறிப்பாக அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒலிபரப்புப்படவில்லை என்று அந்த அந்த அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

- Advertisement -

பதான் பதிலடி:
அதனால் இது ஐசிசிக்கு பதில் பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக தெரிவித்த அவர் இவை அனைத்துக்கும் ஃபைனலுக்கு வந்து பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்திருந்தார். அதை விட முகமது ரிஸ்வான் அவுட்டாகி செல்லும் போது மதரீதியிலான கோஷங்களை சில இந்திய ரசிகர்கள் எழுப்பியதாக அந்நாட்டை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

சொல்லப்போனால் அதை பற்றியும் பாகிஸ்தான் செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுமென்றே இந்தியா தாமதமான விசா வழங்கியதாகவும் அந்நாட்டு வாரியம் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாக புகாரும் செய்தது. இந்நிலையில் 2007 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பெசாவர் நகரில் நடைபெற்ற போட்டியில் தன் கண் பகுதி மீது அந்நாட்டு ரசிகர்கள் இரும்பு துண்டை வீசியதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக அவர் பேசியது பின்வருமாறு. “பெஷாவர் நகரில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர் இரும்பு துண்டை என் மீது வீசி எறிந்தார். அது என்னுடைய கண் பகுதியின் அடியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் அதைப் பற்றி எப்போதுமே பிரச்சனை எழுப்பியதில்லை. மாறாக பாகிஸ்தான் செய்து கொடுத்த வசதிகளை பாராட்டினோம். அதே போல பாகிஸ்தான் இந்தியாவில் ரசிகர்கள் நடத்தையைப் பற்றி பிரச்சனை எழுப்புவதை நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

Irfan Pathan Tweet

அது வைரலானதை தொடர்ந்து இர்பான் பதான் வேண்டுமென்றே சொல்வதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். ஆனால் அது பற்றி 2007இல் வந்த செய்திகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் மீண்டும் பதிவிட்டு இர்பான் கூறியுள்ளது பின்வருமாறு. “அது நடந்ததை இப்போதும் சொல்கிறேன். இந்த பயணத்திற்கு முன்பாக (லக்ஷ்மிபதி) பாலாஜி கொஞ்சம் மெதுவாக அடியுங்கள் என்று சொன்ன சில நல்ல ரசிகர்களும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்வும் அங்கு நடைபெற்றது. இருப்பினும் நாங்கள் அதைப் பற்றி அழுது அடம் பிடிக்காமல் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தினோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement