- Advertisement -
இந்திய கிரிக்கெட்

13க்கு 13 வெற்றி.. சத்தமே இல்லாம கேஎல் ராகுல் இந்திய அணியில் ஃபினிஷராக மாறிட்டாரு.. பதான் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. வதோதராவில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன்களை எடுத்து வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் கேப்டன் சுப்மன் கில் 56, ரோஹித் சர்மா 26 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். அதே வேகத்தில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய விராட் கோலி 93, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து அவுட்டானார்கள்.

- Advertisement -

சத்தமின்றி அசத்தும் ராகுல்:

இருப்பினும் ரவீந்திர ஜடேஜா சொற்ப ரன்னில் அவுட்டானதால் இந்தியா கொஞ்சம் அழுத்தத்தை சந்தித்தது. ஆனால் அப்போது களமிறங்கிய கே.எல். ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த ஹர்ஷித் ராணா அதிரடியாக 29 (23) ரன்களை விளாசி திருப்பு முனையை உண்டாக்கினார். அதை வீணடிக்காத ராகுல் 29* ரன்கள் அடித்து சிக்சருடன் போட்டியை ஃபினிஷிங் செய்தார்.

இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்த போட்டிகளில் ராகுல் 13* முறை அவுட்டாகாமல் களத்தில் இருந்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் அந்த 13 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சமீப காலங்களாகவே லோயர் ஆடரில் சிறப்பாக விளையாடும் ராகுல் சத்தமுன்றி இந்திய அணியின் ஃபினிஷராக அசத்தி வருவதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பதான் பாராட்டு:

இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்யப்பட்ட போட்டியில் கேஎல் ராகுல் அவுட்டாகாமல் இருந்த போட்டிகள் 13. அதில் இந்தியா பெற்ற வெற்றிகள் 13, தோல்விகள் 0. இன்றைய போட்டியில் மீண்டும் ஒருமுறை அவர் மிகவும் கட்டுப்பாட்டுடன் விளையாடினார்”

இதையும் படிங்க: நான் விளையாடியதில் பெஸ்ட் ஐ.பி.எல் கேப்டன் சஞ்சு சாம்சன் தான்.. காரணத்தோடு பாராட்டிய – யுஸ்வேந்திர சாஹல்

“அட்டாக் செய்ய வேண்டிய நேரங்களில் சரியாக விளையாடிய அவர் கடைசி 2 ஓவர் வரை போட்டியை மிகவும் ஆழமாக எடுத்துச் சென்று பின்னர் தன்னுடைய பெரிய ஷாட்டுகளை அடித்தார்” என்று பாராட்டியுள்ளார். இங்கே ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் கேஎல் ராகுல் லோயர் ஆர்டரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா கோப்பையை வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -