அதை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக ஆடும் அவருக்கு சல்யூட் பண்றேன்.. இர்பான் பதான் பாராட்டு

Irfan Pathan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தை விட சிறப்பாக விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் கண்டிப்பாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது. அதில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 முக்கியமான வீரர்கள் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

சல்யூட் செய்கிறேன்:
இந்நிலையில் மிகப்பெரிய காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் காயமடைந்து விடுவோம் என்பதை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்காக மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடுவதற்காக சல்யூட் செய்கிறேன் என்று இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஷமி இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அதற்காக பும்ரா காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல. அவருடைய ஆக்சன் தற்போது கச்சிதமாக இருக்கிறது. பொதுவாக ஷமி ஒருபுறம் அமைதியாக அழுத்தத்தை கொடுக்கும் போது பும்ரா எதிர்ப்புறம் விக்கெட்டுகளை எடுப்பார். அவர்களுடைய பார்ட்னர்ஷிப் ஒருவர் மீதான ஒருவர் அழுத்தத்தை குறைப்பதுடன் அணிக்கும் நல்லதை செய்கிறது”

- Advertisement -

“நான் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் அணுகுமுறைக்கு மிகப்பெரிய ரசிகன். அவர் காயங்களைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதனால் மீண்டும் காயத்தை சந்தித்தாலும் நான் அவருக்கு சல்யூட் செய்தேன். ஏனெனில் அவர் தன்னுடைய சிறந்த செயல்பாடை கொடுக்க முயற்சிக்கிறார் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 48 மணிநேரம் அவரால் பேசமுடியாது.. தண்ணீரால் ஏற்பட்ட விபரீதம்.. மாயங்க் அகர்வால் – விடயத்தில் நடந்தது என்ன?

அவர் கூறுவது போல ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் பெரிய காயத்தை சந்தித்ததும் உடனடியாக கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து எளிதான வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் டி20 தொடருக்கும் முன்னுரிமை கொடுக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய காயத்தை சந்தித்தும் பும்ரா தொடர்ந்து 5 நாட்கள் விளையாட வேண்டிய கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டுக்காக முன்னுரிமை கொடுத்து விளையாடுவது பாராட்டுக்குரியது.

Advertisement