20.50 கோடி கொடுத்தா மட்டும் ஜெயிக்க முடியுமா? சந்தேகம் இருக்கு.. ஹைதெராபாத் முடிவை விமர்சித்த இர்பான் பதான்

Irfan Pathan 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் 10 அணிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பட் கமின்ஸ் தலைமையில் விளையாட உள்ளது. அவர் கேப்டனாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்தார்.

அதன் காரணமாக வீரர்கள் ஏலத்தில் அவரை 20.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஹைதராபாத் வாங்கியிருந்தது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவில் நடந்த எஸ்ஏ டி20 தொடரில் ஐடன் மார்க்கம் 2023, 2024 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஹைதராபாத் அணியின் கிளையான ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

பட் கமின்ஸ் சந்தேகம்:
அதனால் கடந்த வருடம் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் இந்த வருடமும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறியதால் அவரை கழற்றி விட்டுள்ள ஹைதராபாத் தற்போது பட் கமின்ஸை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்று விட்ட காரணத்தால் 20.50 கோடிக்கு வாங்கப்பட்ட பட் கமின்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத பட் கமின்ஸ் பந்து வீச்சிலும் 8.50 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசி வருவதாக இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை ஹைதராபாத் எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பட் கமின்ஸ் மீது ஓடுவதற்கு நினைக்கிறது. அது அவருக்கு நன்மையாகும்”

- Advertisement -

“50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய சர்வதேச தொடர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவருடைய புள்ளிவிவரங்களில் தான் என்னுடைய சந்தேகம் உள்ளது. 8.50 எக்கனாமி என்பது அவரைப் போன்ற பிரீமியர் பந்து வீச்சாளருக்கு அதிகமாகும். அந்த புள்ளி விவரங்கள் நன்றாக இல்லை. இருப்பினும் அது ஒரு வருடத்தில் மாறக்கூடும் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: ஸ்ரீகாந்த் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. என் வாழ்க்கையே மாத்திடுச்சு.. 2008 பின்னணியை பகிர்ந்த அஸ்வின்

“எனவே கடந்த சில வருடங்களாக வெல்ல முடியாத வெற்றியை அவருடைய தலைமையில் பெறுவோம் என்று ஹைதராபாத் நம்புகிறது. ஆனால் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டி20 போட்டிகள் மிகவும் வித்தியாசமானது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல பும்ரா அளவுக்கு பட் கமின்ஸ் டி20 கிரிக்கெட்டில் தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றால் மிகையாகாது.

Advertisement