ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பில்லை என்றால் என்ன ? எனக்கு இவர்க இருக்காங்க நான் அங்க போறேன் – பதான் எடுத்த அதிரடி முடிவு

Irfan-1
- Advertisement -

இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமானார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடினார். 29 டெஸ்ட் போட்டிகளிலும் 120 ஒருநாள் போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 2,800 ரன்கள் அடித்து இருக்கிறார். 250 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

கடந்த வருடம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் சம்பந்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஓய்வு பெற்று விட்டதால் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரை நடத்த இருக்கிறது.இதில் ஐந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த தொடரில் கலந்து கொள்ள வெளிநாடு மற்றும் உள்நாட்டு வீரர்கள் என கிட்டத்தட்ட 500 பேர் பதிவு செய்துள்ளனர்.

irfan-pathan
.
அதில் இந்திய வீரர் இர்பான் பதானும் ஒருவர் இதற்கு அவர் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளார். பி.சி.சி.ஐ அனுமதி வழங்கினால் அவர் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவார். ஏற்கனவே இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

Irfan

அதன்பின்னர் ஐ.பி.எல் தொடரிலும் ஓரங்கட்டப்பட தற்போது இலங்கை ப்ரீமியர் லீக் தொடரில் விளையாட அவர் முயற்சிசெய்து வருகிறார். பி.சி.சி.ஐ அவருக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் இலங்கை லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்று இவர் கருதப்படுவார்.

Advertisement