ஓய்வு பெற்றாலும் தான் வலிமைமிக்க வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து புதிய சாதனை – ஜடேஜாவை ஊதிதள்ளிய பதான்

pathan 1
- Advertisement -

இந்திய ஆல்ரவுண்டரான இர்பான் பதான் 2003ம் ஆண்டு சர்வதேச இந்திய அணியில் அறிமுகமானவர். இவர் 2012ம் ஆண்டு வரை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர். 2007ம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி தான் இந்திய அணிக்காக விளையாடிய வரை பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்துள்ளார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாகவே செயல்படக்கூடியவர் என்பதால் இவர் ஒரு மதிப்புமிக்க வீரர் என்றே கூறலாம்.

Pathan

- Advertisement -

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் இந்திய அணிக்காக 29 டெஸ்ட்,120 ஒருநாள், 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதையடுத்து, இவர் 103 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் அனைத்திலும் சேர்த்து 4000 ரன்கள் மற்றும் 380 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

2012ம் ஆண்டு இந்திய ஆல்ரவுண்டரான இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரிமீயர் லீக் தொடரில் கண்டி டஸ்கர் அணிக்காக விளையாடி வருகிறார். ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிராக விளையாடிய இவர் 19 பந்தில் 25 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் மூலம், டி20 போட்டியில் 2000 ரன்கள் அடித்ததுடன் 150 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா இதற்கு முன் 220 போட்டிகளில் 2000 ரன்கள் அடித்ததுடன், 150 விக்கெட் வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். ஆனால் இர்பான் பதான் இந்த சாதனையை வெறும் 180 போட்டிகளிலே எட்டியுள்ளார்.

dhonipathan

லங்கா பிரிமீயர் லீக் தொடரில் விளையாடி வரும் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட் வீழ்த்தி இந்திய ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா சாதனையுடன் இணைந்துள்ளது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசும் செய்தியாக மாறியுள்ளது அதுமட்டுமின்றி இர்பான் பதான் குறித்த சுவாரஸ்ய விடயங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement