பைனலுக்கு போய்ட்டோம்னு இவ்வளவு ஆட்டம் போடாதீங்க, இந்தியா – பாக் முன்னாள் வீரர்களிடையே வெடித்த மோதல், நடந்தது என்ன

Pak Players Team Fans
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலககோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் சந்தித்த தோல்விகளால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரை இறுதிக்குள் நுழைந்து ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரை இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசால்டாக வென்று நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

முன்னதாக ஒரு கட்டத்தில் வெளியேறி விட்டதாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் கிடைத்த அதிர்ஷ்டத்தில் இப்படி நேரடியாக ஃபைனல் வரை வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும். அதிலும் ஆரம்பத்தில் தடுமாறிய அந்த அணியின் பேட்டிங் துறை அரையிறுதி போட்டியில் பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் ஆகியோரது அற்புதமான செயல்பாடுகளால் முக்கிய நேரத்தில் பார்முக்கு திரும்பியுள்ளது. இதனால் ஆரம்பத்தில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய பாகிஸ்தான் தற்போது 3 துறைகளிலும் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் சவாலான அணியாக எதிரணிகளுக்கு மிரட்டலை கொடுக்கிறது.

- Advertisement -

வெடித்த சண்டை:
அப்படி அதிர்ஷ்டத்துடன் பைனலுக்கு வந்துள்ள பாகிஸ்தான் கடந்த 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இதே போல் ஆரம்பத்தில் சந்தித்த தோல்விகளை கடந்து இறுதியில் இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்றது போல் இம்முறை பாபர் அசாம் தலைமையில் வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். முன்னதாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதியில் வென்ற பின் நிறைய பாகிஸ்தான் வீரர்களும் முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் ரசிகர்களும் ஃபைனலில் உங்களை தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்ற வகையில் வெளிப்படையாகவே இந்தியாவை வம்பிழுத்து வருகிறார்கள்.

அதிலும் மைதானத்திலிருந்த சில ரசிகர்கள் வேண்டுமென்றே இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் பதாகைகளில் கடுமையான சொற்களை எழுதி அறைகூவல் விடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதை அப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டதால் நேரடியாகவே மைதானத்திலிருந்து பார்த்து அதிருப்தியடைந்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பைனலுக்கு சென்று விட்டோம் என்பதற்காக இவ்வளவு ஆட்டம் போடக்கூடாது என்ற வகையில் ட்விட்டரில் கடுமையாக பாகிஸ்தான் ரசிகர்களை சாடினார். அது பற்றி அவர் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

“உறவினர்களே, வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால் அருள் உங்களுக்கு இயல்பாக வருவதில்லை” என்று கூறினார். அதற்கு சில பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் “இது எந்த வீரருக்காகவும் அல்ல” என்று மீண்டும் பதிவிட்டு இர்பான் பதான் தெளிவுபடுத்தினார். அதை பார்த்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் இது போன்ற ட்வீட்களை பார்ப்பது சோகத்தை கொடுப்பதாக பதிலடி கொடுத்தார். மேலும் “அங்கே என்ன நடந்தது என்பது உறுதியாக தெரியாது. இருப்பினும் முரட்டுத்தனமான/அபாண்டமான நடத்தையை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் மோசமாக நடந்து கொண்ட சில ரசிகர்கள் முழு நாட்டையும் பிரதிபலிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆசிர்வாதத்துடன் இருங்கள் இர்பான்” என்று மற்றுமொரு பதிலடி கொடுத்தார்.

அதாவது சில ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டதற்காக மொத்த பாகிஸ்தானும் இந்தியாவை தவறாக பேசியதாக அர்த்தமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்ற வகையில் இர்பான் பதானுக்கு அவர் பதிலளித்தார். இப்படி பரபரப்பு எகிறியுள்ள நிலையில் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து பைனலுக்கு சென்று பாகிஸ்தானை மீண்டும் சாய்த்து களத்தில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement