டி20 உ.கோ’யில் அச்சுறுதலான பாபர் – ரிஸ்வான் கூட்டணியை சாய்க்க – இந்தியாவுக்கு முன்னாள் வீரர் சூப்பர் ஆலோசனை

Rizwan
- Advertisement -

உலக புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் திருவிழாவாக நடைபெற உள்ளது. இத்தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கவுரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்காக ஆக்ரோஷத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதுடன் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதுகின்றனர்.

Babar Azam Rohit Sharma IND vs PAK

- Advertisement -

அதில் கடந்த 1992 முதல் பங்கேற்ற அத்தனை போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடையாமல் வீரநடை போட்ட இந்தியாவை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றி எழுதியது. அந்த நிலையில் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்றாலும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. எனவே அதற்கு பதிலடி கொடுக்க தயாராகி வரும் இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஆலோசனை:
மறுபுறம் கடந்த உலக கோப்பையில் தோல்வியடையக் காரணமாக இருந்த ஷாஹீன் அப்ரிடி ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை என்றாலும் இந்த உலக கோப்பையில் பங்கேற்க மீண்டும் வருகிறார். முன்னதாக கடந்த வருடம் ஷாஹீன் அஃப்ரிடி மட்டுமல்லாமல் இந்தியா எடுத்த 151 ரன்களை அசால்டாக துரத்திய பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் ஆகியோரும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். அத்துடன் தற்சமயத்தில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதால் இம்முறை இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் இந்த ஜோடியை ஆரம்பத்திலேயே பிரித்து சொற்ப ரன்களில் அவுட்டாக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

rizwan

அதில் தற்போது பாபர் அசாம் முழுமையான பார்மில் இல்லாத நிலையில் முஹம்மது ரிஸ்வான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக நல்ல பார்மில் உள்ளார். இந்நிலையில் இந்த வலுவான ஜோடியை உடைப்பதற்கு அகலம் கொடுத்து வீசாமல் ஸ்டம்ப் லைனில் பந்து வீசுவதே வெற்றியை கொடுக்கும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் இந்தியப் பவுலர்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை பைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எந்த காரணத்துக்காகவும் விட்த் (அகலம்) மட்டும் கொடுக்க வேண்டாம். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களை தன்னுடைய தோள் மீது சுமந்து ரன்களை குவிக்கும் ரிஸ்வானுக்கு அம்மாதிரியான பந்துகளை வீசாதீர்கள். அவரை வேகத்தில் கட்டுப்படுத்த முயற்சியுங்கள். மறுபுறம் பாபர் அசாம் ஆரம்பத்தில் சற்று நேரம் எடுத்துக் கொள்வார். எனவே அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக இறுக்கமான ஸ்டம்ப் லைனில் உங்களது பவுலிங் இருக்க வேண்டும்”

irfan-pathan

“அதே சமயம் அவர்களுக்கு வீசும் பந்துகளின் லென்த்தில் சற்று மாற்றம் தேவைப்படும். குறிப்பாக முஹம்மது ரிஸ்வானுக்கு நீங்கள் ஃபுல்லர் பந்துகளை வீச வேண்டும். நீங்கள் அவருடைய முழங்காலுக்கு கீழே பந்தை அடிக்க முயற்சிக்க வேண்டும். அங்குதான் அவருக்கு எதிராக நீங்கள் தொடர்ச்சியான லைன் மற்றும் லென்த்தில் வீச வேண்டும். அதே போல் பாபர் அசாமை நீங்கள் எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்காக அவரது முன்னங்காலை நீங்கள் அடிக்க முயற்சிக்க கூடாது, பின்னங்காலில் குறி வைக்க வேண்டும். ஏனெனில் அவருடைய பின்னங்கால் சற்று திறந்த வெளியில் இருக்கும். இங்கு தான் புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் தங்களுடைய ஸ்விங் பந்துகளை பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும் போட்டி நடைபெறும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகள் பின்வருமாறு. “மெல்போர்ன் மைதானத்தில் நேராக இருக்கும் பவுண்டரியின் அளவு சிறியதாகவும் பக்கவாட்டு பகுதியில் பெரியதாகவும் இருக்கும். எனவே பக்கவாட்டுப் பகுதியில் பவுண்டரிகளை அடிப்பது கடினம் என்பதால் நீங்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அங்கே பக்கவாட்டில் பவுண்டரிகளை அடிப்பது சற்று கடினமாக இருக்கும் என்பதால் அந்த இடங்களில் சிங்கிள், டபுள் எடுப்பது மிகவும் முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement