12 வருடம்.. 80 ரன்ஸ்.. அயர்லாந்து வீராங்கனை அபாரம்.. இங்கிலாந்துக்கு எதிராக சரித்திர வெற்றி

IRE vs ENG
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அந்த தொடரின் கடைசிப் போட்டியில் 23 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் வெற்றியை பெற்று அயர்லாந்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி டப்லின் நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அயர்லாந்து அசத்தல்:

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்களில் மிகவும் போராடி 169-8 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரியோனி ஸ்மித் 28, டம்மி பியூமோன்ட் 40, பைக் ஸ்கோபீல்ட் 34, ஜார்ஜியா ஆடம்ஸ் 23 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து அணிக்கு அதிகபட்சமாக ஒர்லா பிரென்டர்கஸ்ட் 2, அர்லின் கேலி 2, அமி மகுரே 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 170 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு அமி ஹண்டர் 1 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஒர்லா பிரென்டர்கஸ்ட் கேப்டன் கேபி லெவிஸ் ஆகியோர் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். அதில் கேப் லேவிஸ் 38 (35) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த ஒர்லா அரை சதமடித்தார்.

- Advertisement -

அடுத்து வந்த லே பாலுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் தம்முடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து 13 பவுண்டரியுடன் 80 (51) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் லே பால் 27* (27) ரன்கள் எடுத்த உதவியுடன் 19.5 ஓவரில் 170-5 ரன்கள் எடுத்த அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

சரித்திர வெற்றி:

அதனால் இங்கிலாந்துக்கு எதிராக மகளிர் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து புதிய சரித்திரம் படைத்தது. 2012 முதல் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 12 வருடங்களில் இதற்கு முன் விளையாடிய போட்டிகளில் அயர்லாந்து தோல்விகளை மட்டுமே சந்தித்தது. இந்த வெற்றியால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான மகளிர் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்கு எதிராக குறைந்தது ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெற்றி தோல்வி முக்கியமில்லை.. இந்திய அணிக்கு எதிரா எங்களோட இலக்கு இதுதான் – வங்கதேச கேப்டன் பேட்டி

அதனால் அயர்லாந்து அணியினரும் ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடினர். இந்த வெற்றிக்கு 2 விக்கெட் மற்றும் 80 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஒர்லா பிரென்டர்கஸ்ட் ஆட்டநாயகி விருதை வென்றார். மறுபுறம் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேட் க்ராஸ் 2, மேடி வில்லியர்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement