வெற்றி தோல்வி முக்கியமில்லை.. இந்திய அணிக்கு எதிரா எங்களோட இலக்கு இதுதான் – வங்கதேச கேப்டன் பேட்டி

Shanto
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன.

இந்திய அணிக்கெதிரான எங்களது இலக்கு இதுதான் :

இவ்வேளையில் ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சென்னை வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நஜ்முல் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணி நேற்று சென்னை வந்தடைந்தனர்.

- Advertisement -

முன்னதாக புறப்படும்போது டாக்கா விமான நிலையத்தில் பேட்டியளித்த வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறுகையில் : நிச்சயம் இந்த தொடர் எங்களுக்கு மிக சவாலான ஒரு தொடராக இருக்கப்போகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

ஒட்டுமொத்த தேசமும் இப்போது எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் நிச்சயம் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். இந்திய அணி எங்களை விட தரவரிசையில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனாலும் நாங்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இந்த தொடரில் வெற்றி தோல்வி என்பதைவிட ஐந்து நாட்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இந்த தொடரில் எங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளி கொண்டு வந்து இந்திய அணிக்கு கடும் சவாலை அளிப்போம்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் கில்லா? ஜெய்ஸ்வாலா? ஸ்மித் உள்ளிட்ட 7 ஆஸி வீரர்கள் கருத்து

எங்களது அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement