110 ரன்கள் விளாசிய டெயில் எண்டர்கள்.. இங்கிலாந்துக்கு பயத்தை காட்டிய அயர்லாந்து – 1 ரன்னில் தனித்துவமான உலக சாதனை

Eng vs Ire
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இறுதிக்கட்டமாக தயாராவதற்கு உதவும் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 334/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாடி சதத்தை தவற விட்ட போதிலும் 94 (88) ரன்களும் சாம் ஹெயின் 89 (82) ரன்களும் குவித்து பெரிய ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினர்.

- Advertisement -

அயர்லாந்தின் சாதனை:
அயர்லாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்களும் கிரைக் எங் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 35 ரன்கள் துரத்திய அயர்லாந்துக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் 25 (17) ஆண்டி பால்பிரின் 14 (14) என துவக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் குர்ட்டீஸ் கேம்பர் 9 ரன்களில் நடையை கட்டினார். அதனால் 69/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் லார்கன் டுக்கர் 11, மெக்பிரின் 4, மார்க் அடைர் 12 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய ஜார்ஜ் டாக்ரெலும் 43 (54) ரன்களில் அவுட்டானதால் 31.5 ஓவரில் 188/8 என சரிந்த அயர்லாந்து படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஆனதாகட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வகையில் அதிரடியாக விளையாடிய பேரி மெக்கார்தி 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 41 (38) ரன்கள் விளாசி அவுட்டானார். அப்போது 231/9 என தவித்த அயர்லாந்துக்கு மீண்டும் 10வது விக்கெட்டுக்கு கிரைக் எங்குடன் சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜோஸ்வா லிட்டில் 29 (29) ரன்களில் போராடி அவுட்டானார்.

- Advertisement -

அதனால் மறுபுறம் கிரைக் எங் 40* (44) ரன்கள் எடுத்தும் 46.4 ஓவரில் 286 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து போராடி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரிஹான் அஹ்மத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் இப்போட்டியில் அயர்லாந்தின் கடைசி 3 டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் மட்டும் 110 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு பயத்தை காட்டினார்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: IND vs AUS : முக்கிய போட்டியில் திடீரென பும்ரா விலகல்.. ஆஸியை வழி நடத்தும் ஸ்மித்.. 2 அணியிலும் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் இதோ

அதை விட இப்போட்டியில் எந்த வீரர்களும் 50 ரன்கள் கூட அடிக்காமலேயே அயர்லாந்து 286 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் ஒரு வீரர்கள் கூட 50 ரன்கள் அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையை அயர்லாந்து 1 ரன் வித்யாசத்தில் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மான்செஸ்டரில் இங்கிலாந்து இதே போல 285 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement