IND vs AUS : முக்கிய போட்டியில் திடீரென பும்ரா விலகல்.. ஆஸியை வழி நடத்தும் ஸ்மித்.. 2 அணியிலும் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் இதோ

Steve Smith Captain
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. குறிப்பாக ஆசியக் கோப்பை வெற்றியை தொடர்ந்து அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வென்ற இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் முதலிடம் பிடித்த அணி என்ற உலக சாதனையை சமன் செய்தது.

அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி செப்டம்பர் 24ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரில் துவங்கியது. அப்போட்டியில் கேப்டன் பட் கமின்ஸ் ஓய்வெடுத்ததால் தற்காலிகமாக நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழி நடத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

- Advertisement -

பும்ராவுக்கு ஓய்வு:
அத்துடன் ஜோஸ் ஹேசல்வுட், அலெக்ஸ் கேரி, ஸ்பென்சர் ஆகிய 3 வீரர்கள் முறையே மிட்சேல் மார்ஷ், மார்க்கஸ் ஸ்டோனிஸ், பட் கமின்ஸ் ஆகியோருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டனர். மறுபுறம் இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தமது குடும்பத்தை பார்க்க வீட்டுக்கு சென்றதால் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா விளையாடுவார் என்று தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் அறிவித்தார்.

மற்ற படி கடந்த போட்டியில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்களும் மீண்டும் இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த போட்டியை பொறுத்த வரை இந்தியா ஏற்கனவே முன்னிலை வகிப்பதால் இதிலும் வெற்றி பெற்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த பிப்ரவரியில் 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பைக்கு முன்பாக பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா உள்ளது. மறுபுறம் இந்த போட்டியிலும் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விளையாடவில்லை என்பது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இருக்கும் வீரர்களை வைத்து வெற்றி காணும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது.

இதையும் படிங்க: அவங்களால அது முடியலன்னு தான் ஏற்கனவே பிரிச்சோம்.. அஸ்வின் – ஜடேஜா ஒன்னா வெச்சு 2023 உ.கோ ஜெயிக்க முடியாது – ஆகாஷ் சோப்ரா

ஒருவேளை இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் அடுத்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இருப்பினும் அதில் விராட் கோலி, ரோகித் சர்மா, பாண்டியா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அனைவரும் வந்து விடுவார்கள் என்பதால் இந்தியா முழு பலத்துடன் களமிறங்குவதற்கு தயாராகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement