2011 தொடரில் ரெய்னாவை மட்டும் மாத்துனோம்.. 2023 உ.கோ அணியில் சூரியகுமாரை சேர்ப்பது சூதாட்டம் மாதிரி – கம்பீர் எச்சரிக்கை

Gautam gambhir 8
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மொகாலியில் நடைபெற்ற அப்போட்டியில் 277 ரன்களை துரத்தும் போது கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சூரியகுமார் யாதவ் 50 (49) ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். ஆனால் சற்று மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறும் அவர் 25 என்ற சுமாரான பேட்டிங் சராசரியை கொண்டிருப்பதால் நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

- Advertisement -

கம்பீர் எச்சரிக்கை:
இருப்பினும் அணி நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவால் கடந்த பிப்ரவரியில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இப்போட்டியில் அசத்திய அவர் உலகக் கோப்பைக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதனால் லோயர் மிடில் ஆர்டரில் ஃபினிஷராக செயல்படுவதற்கான வாய்ப்பு அவருக்கு உலகக் கோப்பையில் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சூரியகுமாரை 2023 உலகக் கோப்பையில் 6, 7 போன்ற இடங்களில் விளையாட வைப்பது மிகப்பெரிய சூதாட்டமான முடிவாக இருக்கும் என்று கௌதம் கம்பீர் எச்சரித்துள்ளார். குறிப்பாக அதே இடத்தில் 2011 உலகக் கோப்பையில் அசத்திய சுரேஷ் ரெய்னாவை குறிப்பிட்டு பேசிய அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் உலகக் கோப்பைக்கு செல்லும் போது நிலையான 11 பேர் அணியுடன் களமிறங்க வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் உலகக் கோப்பையில் அடிக்கடி மாற்றங்களை செய்யக்கூடாது. எடுத்துக்காட்டாக 2011 உலகக் கோப்பையில் நாங்கள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யவில்லை. குறிப்பாக முதல் 5 – 6 போட்டிகளில் விளையாடிய யூசுப் பதானுக்கு பதிலாக கடைசி நேரங்களில் சுரேஷ் ரெய்னா விளையாடினார். எனவே சூரியகுமார் இந்திய அணியில் இருந்தால் 6, 7 ஆகிய இடங்களில் விளையாடுவதை நான் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: அவங்களால அது முடியலன்னு தான் ஏற்கனவே பிரிச்சோம்.. அஸ்வின் – ஜடேஜா ஒன்னா வெச்சு 2023 உ.கோ ஜெயிக்க முடியாது – ஆகாஷ் சோப்ரா

“ஆனால் அப்போது 5வது இடத்தில் யார் விளையாடுவார் என்பது மிகப்பெரிய கேள்வியாகும். அது போன்ற சூழ்நிலையில் 5, 6 இடங்களில் ஜடேஜா, பாண்டியாவை தொடர்ந்து 7வது இடத்தில் சூரியகுமார் கடைசி 15 – 20 ஓவர்களில் ஃபினிஷராக செயல்பட வேண்டிய நிலைமை வரும். ஆனால் 7வது இடத்தில் சூரியகுமார் விளையாட வேண்டும் என்ற முடிவு மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும். ஏனெனில் இது டாப் 4 பேட்ஸ்மேன்களிடம் அதிக அழுத்தத்தையும் ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement