- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜிஎஸ்டி மாற்றத்தால் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆப்பு.. அதிரடியாக எகிறும் டிக்கெட் விலை.. விவரம் இதோ

இந்திய அரசாங்கம் தங்களுடைய வரி வசூலிக்கும் முறையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கு ஜிஎஸ்டி அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த விதிமுறையில் மக்களுக்கு சாதகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது மக்களுக்கு தேவையான அத்தியாசியமான பொருட்களுக்கு இனிமேல் 5% மட்டுமே வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆடம்பரப் பொருட்கள், போதைப்பொருட்கள், ரேஸ் கிளப் போன்ற விஷயங்களுக்கு 40% வரி விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 40% பிரிவு பற்றி அரசு தெரிவிக்கும் விதிமுறை பின்வருமாறு. “கேசினோக்கள், ரேஸ் கிளப்புகள், கேசினோ சம்மந்தமான இடங்கள், ஐபிஎல் போன்ற விளையாட்டுகளுக்கு இது பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஆப்பு:

செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய அறிவிப்பால் ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அறிவிப்பால் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான டிக்கெட் விலை அதிரடியாக உயர உள்ளது. ஏற்கனவே இருந்த விதிமுறைப்படி ஐபிஎல் தொடருக்கு 28% மட்டுமே வரி விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது 40% என்று மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் 12% கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக ஒரு டிக்கெட் விலை 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். முந்தைய விதிமுறைப்படி 1280 ரூபாய் செலுத்தி வந்த ரசிகர்கள் இனிமேல் 1400 ரூபாய் செலுத்த வேண்டும்.

- Advertisement -

ஐபிஎல் மட்டுமே:

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விதிமுறைகளை மீறி பிளாக் டிக்கெட் விற்கப்படுவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. அந்த சூழ்நிலையில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் சேப்பாக்கத்தில் டிக்கெட் விலை இன்னும் அதிகமாகும் என்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் இது இந்தியாவில் நடைபெறும் தனியார் தொடர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் சாதனை நைட்வாட்ச்மேன்.. ஹாட்ரிக் நாயகன் அமித் மிஸ்ரா ஓய்வு.. உருக்கமான அறிவிப்பு

சர்வதேச போட்டிகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிகளுக்கு 40% வரி கிடையாது. வழக்கம் போல 18% வரி மட்டுமே விதிக்கப்படும். மேலும் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளுக்கும் 18% மட்டுமே வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -