ஐ.பி.எல் 2021 : நாங்க 3 அணிகளுமே ரொம்ப பாதிக்கப்படுவோம் – போர்க்கொடி தூக்கிய ஐ.பி.எல் அணிகள்

ipl

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது 14 வது சீசன் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. வழக்கத்தை விட இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த சீசன் முழுவதுமாக கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதன் காரணமாக ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். அதனை போக்குவதற்காக தற்போது இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு நடத்த பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது.

IPL

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொரு மைதானத்தை சொந்தமாக கொண்ட அணிகளும் விளையாடுகிறது. சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் அனைத்து அணிகளும் விளையாடும். இந்நிலையில் கோரோனோ பரவல் முற்றிலும் குறையாத காரணத்தினால் இந்த வருட போட்டிகள் கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், மும்பை ஆகிய 6 நகரங்களில் மட்டுமே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அதிலும் அகமதாபாத் எந்த ஒரு அணிக்கும் சொந்த மைதானம் கிடையாது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்த பி.சி.சி.ஐ யின் தேர்விற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இதுகுறித்து அந்த அணிகளின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில் : நாங்கள் மூன்று அணிகளுமே இதனால் மோசமாக பாதிக்கப்படும்.

Ipl cup

சொந்த மைதானத்தில் அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. சொந்த மைதானத்தில் 5 அல்லது 6 இல் வெற்றி பெற்று வெளியிடங்களில் சில போட்டிகளை வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் முன்னேற முடியும். ஆனால் இம்முறை எங்களது சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறவில்லை என்றால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

- Advertisement -

SRH

ஏனெனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் அனுகூலம் கிடைக்கும். நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெளியில் சென்று விளையாடினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மூன்று அணிகளின் அதிகாரிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.