தெ.ஆ புதிய டி20 அணிகளை வாங்கும் ஐபிஎல் உரிமையாளர்கள் – யார்யார் எந்தெந்த அணி, முழுவிவரம்

IPL 2022
- Advertisement -

ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஓவர் போட்டிகள் பரபரப்பான தருணங்களை கொடுத்து அது வரை நடைபெற்று வந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி அதிக மவுசு பெற்றது. அதைப்பார்த்து கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் அதையும் மிஞ்சும் வகையில் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் தருணங்களை கொடுத்து ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்களை முடிவுகளாக கொடுத்து நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்தது. கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களைக் கண்டுள்ள இத்தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட தரமான தொடராக உருவெடுத்துள்ளது.

T2 World Cup vs IPL ICC vs BCCI

- Advertisement -

அதேபோல் இந்த தொடரில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியைவிட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. அதனால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக விரிவடைய உள்ளது. இதன் வளர்ச்சியை கண்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட இதர வெளிநாட்டு வாரியங்களும் ஆளாளுக்கு தங்களது நாட்டில் பிக் பேஷ், பிஎஸ்எல் போன்ற டி20 தொடர்களை உருவாக்கி நடத்தி வந்தாலும் அந்த தொடர்களால் ஐபிஎல் உயரத்தை எட்ட முடியவில்லை.

தென்ஆப்பிரிக்க டி20:
அந்த வகையில் மசான்சி சூப்பர் லீக் என்ற பெயரில் தங்களது நாட்டில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஒரு டி20 தொடரை சமீப காலங்களில் நடத்தி வந்தது. ஆனால் அந்தத் தொடர் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் கடந்த வருடத்துடன் நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஐபிஎல் போன்ற வெளிநாட்டு டி20 தொடரை போல் தங்களது நாட்டில் பிரிமியர் தொடரை மீண்டும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அந்நாட்டு வாரியம் “டி20 சேலஞ்ச்” என்ற பெயரில் 6 அணிகள் பங்கேற்கும் புதிய தொடர் வரும் டிசம்பர்/ஜனவரி மாதங்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் விளையாடும் 6 அணிகளை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கும் அந்நாட்டு வாரியம் அழைப்பு விடுத்திருந்தது.

rsa

அந்த நிலைமையில் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் சம்பளமாக அள்ளும் வீரர்களைப் போல் பணத்தை முதலீடுகளை செய்து அணிகளை வாங்கியுள்ள அதன் நிர்வாகிகளும் 15 வருடங்கள் கழித்து இன்று இந்திய அளவில் நம்பர் ஒன் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளனர். எனவே தென் ஆப்பிரிக்காவில் நடைபெறப்போகும் அந்த டி20 தொடரில் விளையாடும் அணிகளை வாங்குவதற்கு ஐபிஎல் உரிமையாளர்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களுடன் பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரில் விளையாடும் ஒருசில அணிகளின் உரிமையாளர்கள், இங்கிலாந்தின் நட்சத்திரம் கெவின் பீட்டர்சன் நிர்வகிக்கும் நிர்வாகம் உட்பட மொத்தம் 29 நிர்வாகங்கள் 6 அணிகளை வாங்குவதற்கு விண்ணப்பங்களை பெற்றுள்ளன.

- Advertisement -

6 அணிகள்:
அதில் மும்பை அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், டெல்லியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஹைதராபாத் அணியின் உரிமையாளர் கலாநிதி மாறன், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா, ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜ் படலே ஆகிய ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்த தொடரில் விளையாடும் அணிகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது.

Nita Ambani MI

என்னதான் பல்வேறு 29 நிர்வாகங்கள் இந்த அணிகளை வாங்க போட்டி போட்டாலும் ஏற்கனவே நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ளதாலும் இதர நிர்வாகங்களை காட்டிலும் பணத்தில் சற்று உயர்ந்தவர்களாக இருப்பதாலும் இவர்களே அந்த 6 அணியை வாங்குவதற்கான உரிமையை கிட்டதட்ட வென்றுள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி 5 கோப்பைகளை வென்ற மும்பை நிர்வாகம் கேப் டவுன் நகரை மையப்படுத்திய அணியையும் 4 கோப்பைகளை வென்றுள்ள சென்னை அணி நிர்வாகம் ஜோகனஸ்பர்க் நகரை மையப்படுத்திய அணியையும் டெல்லி அணி நிர்வாகம் பிரிட்டோரியா நகரை மையப்படுத்திய அணியையும் டர்பன் நகரை மையமாகக் கொண்ட அணியை லக்னோ அணி நிர்வாகமும் போர்ட் எலிசபெத் நகரை மையமாகக் கொண்ட அணியை ஹைதராபாத் அணி நிர்வாகமும் பார்ல் நகரை மையமாகக் கொண்ட அணியை ராஜஸ்தான் அணி நிர்வாகமும் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்த தொடர் உள்நாட்டு மற்றூம் வெளிநாட்டு நட்சத்திரங்களுடன் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 தொடரும் துபாயில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு டி20 தொடருடன் இந்த தொடரும் மோத உள்ளது.

இதையும் படிங்க : வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி. 2 வீரர்கள் ஒரே நாளில் ஓய்வை அறிவித்த பரிதாபம் – விவரம் இதோ

மேலும் இத்தொடருக்காக ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்க இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் அந்நாட்டு வாரியம் சமீபத்தில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement