வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி. 2 வீரர்கள் ஒரே நாளில் ஓய்வை அறிவித்த பரிதாபம் – விவரம் இதோ

Ramdin-and-Simmons
Advertisement

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் தொடர்ச்சியாக ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி இரண்டு மூன்று மாதங்களாகவே ஏகப்பட்ட வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின் மற்றும் முன்னணி வீரரான லெண்டில் சிமெண்ட்ஸ் ஆகியோர் நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

Ramdin

இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ராம்தின் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்படவே தற்போது ஓய்வு அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதுவரை அவர் 74 டெஸ்ட் போட்டிகள், 139 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 71 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர் 2014 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

Simmons

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 17 போட்டிகளை அவர் கேப்டனாக வழிநடத்திய இவருக்கு சமீபகாலமாகவே வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதேபோன்று மற்றொரு அதிரடி துவக்க வீரரான லெண்டில் சிம்மன்ஸ்ஸும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார்.

- Advertisement -

அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகள், 68 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் சமீகாலமாகவே வாய்ப்புகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான இவர்கள் இருவரும் நேற்று ஒரே நாளில் ஓய்வினை அறிவித்தது அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement