சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Dhoni
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களுக்கு நாட்டுக்கு வெற்றிகளைத் தேடி கொடுக்க நினைக்கும் பேட்ஸ்மேன்கள் அதற்கு சவாலாக நிற்கும் தரமான எதிரணி பவுலர்களை எதிர்கொண்டு பெரிய அளவில் ரன்களை சேர்க்கும் நோக்கில் களமிறங்குவார்கள். இதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 விதமான கிரிக்கெட்டிலும் வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன்களை சேர்ப்பதே வெற்றிக்கான முதல் வழியாகும். இருப்பினும் போட்டியின் சூழ்நிலைக்கேற்ப நிதானத்துடன் பேட்டிங் செய்ய வேண்டியதும் பெரிய ரன்களை எடுப்பதற்கான அடிப்படையான அம்சமாகும்.

Abd

- Advertisement -

மேலும் என்னதான் அதிரடி காட்ட வேண்டிய டி20 போட்டிகளாக இருந்தாலும் அதில் களமிறங்கும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அதிரடியை துவக்குவதற்கு முன்பாக பிட்ச்சின் தன்மை மற்றும் எதிரணி பவுலரை கணிப்பதற்காக ஆரம்பத்தில் ஒருசில பந்துகளில் மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார்கள். அதற்காக அதிகப்படியான பந்துகளையும் எதிர்கொள்ளாமல் ஒருசில பந்துகளில் ரன்களை எடுக்காமல் போனால் ஒரு கட்டத்தில் அதுவே அழுத்தத்தை உண்டாக்கி முதல் ரன்னை எப்படியாவது எடுக்க வேண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி ரன் எடுக்காமலேயே டக் அவுட்டாவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்து விடும்.

டாப் 5 பேட்ஸ்மேன்கள்:
மேலும் சில சமயங்களில் எதிரணி பவுலர்கள் தங்களது திறமையை விட தரமாக பந்து வீசினாலும் ரன்கள் எடுக்காமல் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்ப வேண்டிய பரிதாப நிலையும் ஏற்படும். அதனால் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு அதுவும் டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டாவது மிகப்பெரிய தலைகுனிவு போன்றதாகும். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

Samuels

5. மர்லான் சாமுவேல்ஸ் 65*: 2012 மற்றும் 2016 ஆகிய வருடங்களில் வெஸ்ட் இண்டீஸ் 2 டி20 உலகக் கோப்பையை வெல்ல தனது முரட்டுத்தனமான பேட்டிங்கால் முக்கிய பங்காற்றிய இவர் 65 சர்வதேச டி20 இன்னிங்சில் 1611 ரன்களை குவித்து கடந்த 2018இல் ஓய்வு பெற்றார். அந்த 65 இன்னிங்சில் ஒரு முறை கூட டக் அவுட்டாகாமல் அசத்திய அவர் இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. முஹம்மதுல்லா 66: கடந்த 2012இல் அறிமுகமாகி சமீப கால கிரிக்கெட்டில் வங்க தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் வீரராக அசத்தி வரும் இவர் இதுவரை நாட்டுக்காக பங்கேற்ற 110 இன்னிங்சில் 2042 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். இருப்பினும் தனது முதல் 66 இன்னிங்ஸ்சில் டக் அவுட்டாகாமல் விளையாடிய அவர் கடந்த 2021இல் 0 ரன்களில் ஆட்டமிழந்து இப்பட்டியலில் 4-வது இடத்தைப் பிடிக்கிறார்.

malik

3. சோயப் மாலிக் 69: கடந்த 2006இல் பாகிஸ்தானுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான இவர் தனது நாட்டிற்காக 111 இன்னிங்ஸ்சில் 2435 ரன்களை 31.22 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

2012இல் ஒரு போட்டியில் டக் அவுட்டான அவர் அதன்பின் தொடர்ச்சியாக 69 இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடிய நிலையில் கடந்த 2021இல் கடைசியாக விளையாடிய வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் டக் அவுட்டானாலும் இப்பட்டியலில் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஆச்சரியமாக தனது கேரியரில் அந்த 2 டக் அவுட் மட்டுமே அவர் பதிவு செய்துள்ளார்.

Guptill

3. மார்ட்டின் கப்டில் 69: நியூசிலாந்து நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரரான இவர் கடந்த 2009இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இப்போதுவரை 112 போட்டிகளில் 3299 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

2011இல் முதல் முறையாக ஒரு போட்டியில் டக் அவுட்டான அவர் அதன்பின் 2020 வரை தொடர்ச்சியாக 69 இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடி இந்த பட்டியலில் 3-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

Dhoni

2. எம்எஸ் தோனி 84*: கடந்த 2006இல் இந்தியா விளையாடிய வரலாற்றின் முதல் டி20 போட்டியில் அறிமுகமான இவர் கடைசியாக கடந்த 2019இல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருடன் ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி நாளடைவில் 10000 ரன்களை குவித்து மகத்தான சாதனை படைத்த இவர் டி20 கிரிக்கெட்டிலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய அந்த முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி தனது கேரியரை 0வில் தொடங்கினார்.

ஆனால் அதன்பின் ஓய்வு பெறும் வரை டக் அவுட்டே ஆகாமல் 1617 ரன்களை 37.60 என்ற நல்ல சராசரியில் எடுத்து 2007இல் கேப்டனாக டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக விடைபெற்றார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் மொத்தமாக விளையாடிய 85 இன்னிங்சில் முதல் போட்டியைத் தவிர எஞ்சிய 84 இன்னிங்ஸில் இவர் டக் அவுட்டானது கிடையாது.

David Miller vs IND

1. டேவிட் மில்லர் 87*: கடந்த 2010இல் அறிமுகமாகி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ள இவர் தென் ஆப்பிரிக்காவின் நம்பிக்கை நாயகனாக இதுவரை பங்கேற்ற 87 இன்னிங்சிலும் ஒரு முறை கூட டக் அவுட்டே ஆகாமல் 1882 ரன்களை 32.44 என்ற நல்ல சராசரியில் எடுத்து டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகவும் அதிக போட்டிகளிலும் ஒருமுறைகூட டக் அவுட்டாக வீரர் என்ற உலக சாதனையை படைத்து வருகிறார்.

Advertisement