கிரிக்கெட்டின் அசுரனாக அவதரிக்கும் ஐபிஎல் தொடர் ! மகிழ்ச்சியுடன் கவலை, வரமா – சாபமா, ஒரு அலசல்

IPL 2022 (2)
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களாக தினம்தோறும் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த த்ரில்லர் போட்டிகளுடன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்றதால் கோப்பையை வெல்வதற்கு முன்பை விட இருமடங்கு போட்டி காணப்பட்டது.

Gujarat Titans GT Champ

- Advertisement -

அதில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் மிரட்டிய குஜராத் டைட்டன்ஸ் முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது. அதையடுத்து ஜூன் 9-ஆம் முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

விஸ்வரூப வளர்ச்சி:
முன்னதாக கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு பல பரிணாம வளர்ச்சியை கண்டு இன்று தரத்திலும் பணத்திலும் உலகின் நம்பர் ஒன் டி20 உருவெடுத்துள்ளது. ஏனெனில் இதில் நடைபெறும் 100க்கு 90% போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களின் நகத்தை கடிக்க வைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் திரில்லர் விருந்து படைக்கிறது. அதன் காரணமாக ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் மிகச்சிறந்த தொடர் என்று சுனில் கவாஸ்கர், ஏபி டிவிலியர்ஸ் போன்ற பல ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர்.

Narendra Modi Stadium Ahamedabad

அதேபோல் பணத்தை மழையாகக் கொட்டும் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கிறது. அதனால் ஐசிசியை விட சமீப காலங்களில் இந்தியா பணக்கார கிரிக்கெட் வாரியமாக அவதரித்துள்ளது. மேலும் இந்த வருடம் லக்னோ 7000+ கோடி, குஜராத் 5000+ கோடி என்ற பெரிய தொகையில் புதிய 2 அணிகள் உருவாக்கப்பட்டு 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெற்றது. மேலும் இந்தத் தொடரில் 2 மாதங்கள் விளையாடுவதற்கு கோடிகணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவதால் சமீப காலங்களில் நிறைய வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட முன்னுரிமை அளிக்கின்றனர்.

- Advertisement -

அசுரனாக ஐபிஎல்:
அதைவிட தினந்தோறும் த்ரில்லான போட்டிகளை பார்த்துவிட்டு தரமில்லாமல் நடைபெறும் சர்வதேச டி20 போட்டிகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் அமைகிறது. எடுத்துகாட்டாக இந்தியா – இலங்கை, ஆஸ்திரேலியா – வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும்போது அதில் ஒரு அணி பலவீனமாக இருப்பதால் அப்போட்டியில் தரம் தாமாக குறைந்து விடுகிறது. எனவே சர்வதேச அளவிலான டி20 போட்டிகளை கால்பந்து ஆட்டத்தை போல் டி20 உலகக் கோப்பையாக மட்டும் நடத்திவிட்டு எஞ்சிய சமயங்களில் 2 ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி உட்பட முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். தற்போது அது விரைவில் நடக்கப் போவதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

IPL 2022

1. ஆம் இந்த வருடம் 74 போட்டிகளுடன் நடைபெற்ற ஐபிஎல் அடுத்த 2 வருடங்களில் அதே வகையில் நடைபெற உள்ளது. ஆனால் 2025, 2026 ஆகிய சீசன்களில் அது 84 போட்டிகளாகவும் 2027 முதல் 94 போட்டிகளாகவும் அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

2. அதாவது ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிந்தது. எனவே அடுத்ததாக 2023 – 2027 ஆகிய வருடங்களுக்கான உரிமையை பிசிசிஐ விரைவில் ஏலம்விட உள்ளது. அதற்கான அடிப்படை விலை 30000+ கோடியாகும்.

IPL

3. அந்த வகையில் ஒப்பந்ததாரர்களிடம் மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 370 முதல் 410 ஐபிஎல் போட்டிகள் வரை நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மொத்தத்தில் அடுத்த 5 வருடங்களில் 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

வரமா – சாபமா:
அது வெற்றி பெறும் பட்சத்தில் அதன்பின் வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடர் நடப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் சர்வதேச டி20 போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடும். சொல்லப்போனால் கால்பந்தாட்டத்தை போல சர்வதேச டி20 போட்டிகளை உலகக் கோப்பையில் மட்டும் 2 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே காண முடியும். இதை ஐசிசி தடுக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஐபிஎல் தொடரால் சர்வதேச டி20 போட்டிகளை காட்டிலும் அதிக பணம் ஐசிசிக்கு வருமானமாக கிடைப்பதால் ஐபிஎல் தொடரை விரிவுபடுத்த பிசிசிஐ அழுத்தம் கொடுத்தால் அதற்கு ஐசிசி அடி பணிந்தே தீரவேண்டும்.

1. இந்த அபரிதமான வளர்ச்சியால் ரசிகர்களுக்கு த்ரில்லர் நிறைந்த போட்டிகளும் பிசிசிஐக்கு 2 மடங்கு பணமும் கிடைக்கும். கால்பந்துக்கு நிகராக கிரிக்கெட்டும் உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக உருவெடுக்கும். ஆனால் ஏற்கனவே நிறைய வல்லுனர்கள் கூறுவதுபோல சர்வதேச போட்டிகள் அழிந்து போக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : என்ன பேசுறீங்க, கபில் தேவுக்கு ஈடாக நான் வருவேனா? அவ்ளோ வொர்த் இல்ல – அடக்கமாக பேசிய ஹார்டிக் பாண்டியா

2. சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமல்லாது பிரம்மாண்ட ஐபிஎல் அல்லது 2 ஐபிஎல் வந்தால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிடும். எனவே இந்த செய்தி உண்மையான கிரிக்கெட் ரசிகனுக்கு மகிழ்ச்சி கலந்த கவலையான செய்தி என்றே கூறலாம். இது வரமா சாபமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement