என்ன பேசுறீங்க, கபில் தேவுக்கு ஈடாக நான் வருவேனா? அவ்ளோ வொர்த் இல்ல – அடக்கமாக பேசிய ஹார்டிக் பாண்டியா

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் நிறைவு பெற்றதை அடுத்து தென் ஆப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் சந்திக்கும் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கேஎல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் கடைசி நேரத்தில் காயமடைந்த அவருக்கு பதில் மற்றொரு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சமீபத்திய ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அற்புதமாக செயல்பட்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் குஜராத்தை அபாரமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Ind vs SA Temba Bavuma Pant

- Advertisement -

இவர்களுடன் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பினிஷராக மிரட்டிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 3 வருடங்கள் கழித்து திரும்பியுள்ள நிலையில் புவனேஸ்வர் குமார், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்ஷல் படேல் ஆகிய சீனியர்களுடன் வேகத்தால் அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டை அள்ளிய உம்ரான் மாலிக் துல்லியமாக பந்துவீசி எதிரணிகளை தெறிக்கவிட்ட அர்ஷிதீப் சிங் ஆகியோரும் முதல் முறையாக இடம் பிடித்துள்ளனர். எனவே தரமும் அனுபவமும் இளமையும் கலந்துள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் சாய்த்து கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டியா ரிட்டர்ன்ஸ்:
இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எகிறியுள்ளது. ஏனெனில் கடந்த 2016இல் அறிமுகமாகி 2017 – 2019 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் அதிரடியான பேட்டிங் சிறப்பான பவுலிங் துடிப்பான ஃபீல்டிங்க் போன்றவற்றால் அவர் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். மேலும் இர்பான் பதான் போன்றவர்களை காட்டிலும் ஒரு துடிப்பான வேகம் கலந்த இளம் வீரராக மிரட்டிய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களிடம் ஏற்படுத்தினார். ஆனால் 2019 உலக கோப்பைக்கு பின் காயமடைந்த அவர் பேட்டிங் செய்ய தடுமாறியதுடன் பந்து வீச முடியாமல் தவித்தார்.

அதிலிருந்து குணமடைந்த அவர் கடந்த 2021 ஐசிசி டி20 உலக கோப்பையில் விளையாடிய போதிலும் பந்துவீச தடுமாறியதுடன் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்தது. அதனால் கடுப்பான தேர்வு குழுவினர் முழுமையாக குணமடைந்து ஆல்-ரவுண்டராக வரும் வரை இடமில்லை என்று அதிரடியாக நீக்கியது. அந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடரில் பேட்டிங்கில் 487 ரன்களும் பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளும் எடுத்த அவர் சிறந்த ஆல்-ரவுண்டராக கேப்டனாக கோப்பையை வென்று தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

பாதியளவு இல்லை:
அதுவும் அழுத்தம் நிறைந்த பைனலில் 34 ரன்கள் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் முழு பார்முக்கு திரும்பி விட்டதாக நிரூபித்துள்ளார். அதனால் கபில் தேவ் போன்ற ஒரு மகத்தான ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் இந்தியாவிற்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா வாயிலாக கிடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நிறைய முன்னாள் வீரர்களும் வல்லுனர்களும் அடிக்கடி கபில் தேவ் – ஹர்டிக் பாண்டியா ஆகியோரை ஒப்பிட்டு பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் அவரின் பாதியளவு கூட தம்மால் வர முடியாது என்று தெரிவித்துள்ள பாண்டியா தயவு செய்து அவருடன் தம்மை ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Kapil

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த ஒப்பீடுகளை மரியாதையாக நான் மறுக்கிறேன். ஏனெனில் அவருக்கு அருகில் கூட என்னால் செல்ல முடியாது என்று நினைக்கிறேன். அவர் தனது காலத்தில் செய்த சாதனைகளில் 5% கூட என்னால் செய்திருக்க முடியாது என்பதை நான் எப்போதே கூறியுள்ளேன். சொல்லப்போனால் இன்னும் அந்த 5 சதவீதத்தை கூட நான் தொடவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரை அதை வல்லுனர்கள் ஒப்பிடும் கருத்தாக மட்டுமே பார்க்கிறேன்”

- Advertisement -

“என்னை பொறுத்தவரை நான் ஹர்திக் பாண்டியாவாக இருந்து முன்னேற முயற்சிக்கிறேன். எப்போதும் கபில் தேவ் அருகில் கூட என்னால் வர முடியாது. அவர் வரலாற்றின் மகத்தான கிரிக்கெட்டர். பௌலிங், பேட்டிங், பில்டிங் என அனைத்து துறைகளிலும் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அபாரமானது. எனவே அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவதை அவரவர்கள் விருப்பம். ஆனால் நான் அதை மரியாதையாக மறுக்கிறேன்” என்று அடக்கமாக பேசினார்.

இதையும் படிங்க : Breaking : முதல் டி20 போட்டிக்கு முன்னர் கோவிட் பாசிட்டிவ் ரிசல்ட்டால் வாய்ப்பை இழந்த – நட்சத்திர வீரர்

தற்போது ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் வரும் காலங்களில் கபில் தேவ் போல ஹர்திக் பாண்டியாவும் இந்தியாவின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பது இந்த தருணத்தில் குறிப்பிடத்தக்கது.

Advertisement