திட்டமிட்டபடி நடைபெறுமா ஐ.பி.எல் ? கங்குலியிடம் பேச இருக்கும் சென்ட்ரல் கவர்மெண்ட் – விவரம் இதோ

dhoni
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதற்கு காரணம் யாதெனில் சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்குதல் இப்போது படிப்படியாக உலக நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. அதன்படி இந்தியாவின் தலைநகரான டெல்லி இன்னும் ஒருவருக்கு ஒருவர் வைரஸ் தாக்கிய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

மேலும் இந்தியாவில் இதுவரை இதுவரை 31 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து ரசிகர்களை காப்பாற்ற பொது இடத்தில் மக்கள் கூட கூடாது என்று மத்திய அரசு சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்ச்சிகள் கூட்டங்கள் என எதையும் அதிகளவில் பங்கேற்க வேண்டாம் என்றும் அரசு சார்பாக அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது மோடியின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடக்கும் பொழுது ஒரு மைதானத்தில் 30000 முதல் 40000 பேர் வந்து போட்டியை ரசிப்பார்கள். அவ்வாறு பெரிய ரசிகர் கூட்டம் கூடும் போது கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் இவ்வாறு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் சேர்வது என்பது பெரிய ரிஸ்க். மக்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Dhoni

மேலும் இது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக நடக்க வாய்ப்பு உள்ளது. அந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது மேலும் இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம். ஆனால் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் இது போன்ற முக்கிய முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க அதிகாரம் உள்ளது என்று கங்குலி தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கிரிக்கெட் போர்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மீட்டிங் இன்னும் இரண்டு நாட்களில் நடக்கும் என்று தெரிகிறது. அதன்படி மத்திய அரசு மற்றும் பிசிசிஐ தலைவர்களிடையே கூட்டம் நடந்து அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு இறுதியாக அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

Dhoni

மக்களின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு வீரர்களில் நிலை மற்றும் ரசிகர்களின் நிலை ஆகிய விடயங்களை கருத்தில் கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும். இருப்பினும் இந்த தொடருக்கான வீரர்களின் பயிற்சி தற்போது தீவிரமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டு போட்டி நடப்பது சந்தேகமாக உள்ளதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement