சீன நிறுவனமான விவோவின் ஸ்பான்சர்ஷிப்பை கட் செய்கிறதா ? பி.சி.சி.ஐ – அதிகாரபூர்வ அறிவிப்பு

IPL-1
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 12 தொடர்ந்து நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருடத்தின் ஐபிஎல் நடக்குமா? என்ற சந்தேகத்தில் தான் அனைவரும் இருக்கிறோம். கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடரில் ஓவ்வொரு 5 வருடத்திற்கு ஒருமுறை ஒரு பெரிய வணிக நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது.

- Advertisement -

அதன்படி கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரின் ஸ்பான்சராக விவோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விவோவின் ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்யவேண்டும் என்று நாடு முழுவதும் ரசிகர்கள் பி.சிசி.ஐ க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் யாதெனில் : லடாக் எல்லையான கள்வன் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இந்தியா சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சீனப் பொருட்களை தடை படுத்த வேண்டும் என்றும், சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.

Ipl cup

இதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில் : ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்தில் : இது ஐந்து வருட ஒப்பந்தம் அது முடியும் வரை இந்த ஒப்பந்தம் தொடரும். சீன நிறுவனங்களுக்கு உதவுவது என்பது வேறு ஆனால் சீன நிறுவனத்திடம் இருந்து நாம் பயன் பெறுவது என்பது வேறு, அதில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

staripl

தற்போது சீன நிறுவனங்கள் இங்கே நுகர்வோரிடம் தங்களது தயாரிப்பை விற்று பணம் ஈட்டுகிறார்கள். அப்படி இருக்க அதன் லாபத்தில் இருந்து இந்தியாவிற்கு ஸ்பான்சராக வரும் பணத்தை நாம் எப்படி விட முடியும். இந்த பெரும் தொகைக்கு வரி செலுத்தப்படுகிறது. இது இந்தியாவிற்கு தான் சாதகம் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement