இங்கிலாந்தை விட நாம தான் ராஜா, இந்தியாவே பெருமைப்படுகிறது – மகிழ்ச்சியுடன் கங்குலி பேச்சு, எதற்கு தெரியுமா?

Ganguly
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 முதல் மே 29-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்று ரசிகர்களுக்கு த்ரில்லான போட்டிகளை விருந்தாக படைத்தது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்றதால் கோப்பையை வெல்வதற்கு இருமடங்கு போட்டி காணப்பட்டது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே அபாரமாக செயல்பட்டு சொந்த மண்ணில் நடைபெற்ற பைனலில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி சாதனை படைத்தது.

- Advertisement -

முன்னதாக கடந்த 2008இல் 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு புதிய பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத முடிவுகளை கொடுத்து த்ரில்லாக அமைவதால் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், பாகிஸ்தானின் பிஎஸ்எல் போன்ற இதர நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களை காட்டிலும் ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் தொடராக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் பணமழை:
அதனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தொடர் தரமாக உள்ளதென்று நிறைய முன்னாள் வீரர்கள் பலமுறை பாராட்டியுள்ளார்கள். தரத்திற்கு ஈடாக பணத்தையும் மழை போல கொட்டும் இந்த தொடரால் ஒவ்வொரு வருடமும் 4000 – 5000 கோடிகளை வருமானமாக சம்பாதிக்கும் பிசிசிஐ ஐசிசியை விட பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்த வருடம் உருவாக்கப்பட்ட லக்னோ 7000+ கோடி, குஜராத் 5000+ ஆகிய 2 புதிய அணிகளின் வாயிலாக மட்டும் பிசிசிஐக்கு 12,000க்கும் மேற்பட்ட கோடிகள் வருமானமாக கிடைத்தது.

IPL 2022

அதுபோக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் ஆரஞ்சு, ஊதா தொகைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் அறிவித்த பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப் வாயிலாக மட்டுமே 1000+ கோடி என்ற உச்சகட்ட வருமானத்தை தொட்டது. அதேபோல் இந்த தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாடும் வீரர்கள் கோடிக் கணக்கில் சம்பளமாக அள்ளுகின்றனர். சொல்லப்போனால் இந்த தொடரின் வாயிலாக எத்தனையோ ஏழ்மையான கிரிக்கெட் வீரர்களின் அடிப்படை வாழ்வாதாரம் பன்மடங்கு உயர்ந்ததையும் சமீப காலங்களில் பார்த்தோம்.

- Advertisement -

கங்குலி பெருமை:
இந்த நிலைமையில் தமது காலத்தில் ரூபாய் கணக்கில் சம்பாதித்த கிரிக்கெட் வீரர்கள் இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பொன்னான வாய்ப்பு ஐபிஎல் தொடரால் கிடைத்துள்ளது என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். மேலும் உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக கருதப்படும் கால்பந்தின் பிரபல பிரீமியர் தொடரான இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரை காட்டிலும் ஐபிஎல் தொடரில் அதிக வருமானம் கிடைப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமை என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Ganguly-2

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விளையாட்டு (ஐபிஎல்) ரூபாய் கணக்கில் சம்பாதித்த வீரர்களை கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த விளையாட்டு நம் நாட்டில் உள்ள ரசிகர்களால் பிசிசிஐயால் நடத்தப்படுகிறது. அது ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு தனது முன்னேற்றத்தை தொடர்கிறது. இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரை விட ஐபிஎல் தொடர் நிறைய வருமானத்தை உருவாக்குகிறது. நான் விரும்பும் விளையாட்டு இந்த அளவுக்கு வலுவாக உருவெடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

கேப்டன் கங்குலி:
கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி சூதாட்ட புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மகத்தான கேப்டனாக கருதப்படுகிறார். அதனால் இன்று பிசிசிஐ தலைவராக உயர்ந்துள்ள அவர் தமக்குக் கீழ் விளையாடிய ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை எப்போதும் போட்டியாக கருதாமல் அவர்களுடன் இணைந்து சாதாரண வீரராக விளையாடியதால் கேப்டன்ஷிப் பொறுப்பை மகிழ்ச்சியுடன் செய்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs RSA : உம்ரான் மாலிக்க்கு வாய்ப்பு கொடுக்க இதைவிட நல்ல தருணம் அமையாது – முன்னாள் கேப்டன் கருத்து

இது பற்றி அவர் மேலும் பேசியது முன் பின்வருமாறு. “என்னைப் பொறுத்தவரை கேப்டன்ஷிப் என்பது களத்தில் அணியை வழிநடத்துவது, தலைமைப் பண்பு என்பது நல்ல அணியை உருவாக்குவது. எனவே சச்சின், அசாருதீன், டிராவிட் ஆகியோருடன் எப்போதும் நான் போட்டி போட்டதில்லை. மாறாக அவர்களுடன் இணைந்து தலைமைப் பொறுப்பை பகிர்ந்து கொண்டேன். எனது அணிக்கு நான் வெற்றிகரமான கேப்டனாக இருக்க வேண்டுமெனில் முதலில் எனது அணி வீரர்களை மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement