ஐ.பி.எல் தொடரில் 9 ஆவதாக இணையவிருக்கும் அணி இதுதானாம் – பி.சி.சி.ஐ வட்டாரத்தில் இருந்து வெளியான தகவல்

IPL-1

கொரோனா பாதிப்பினால் இந்த ஆண்டு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? நடைபெறாதா ? என்ற சந்தேக நிலையிலிருந்து பிசிசிஐ யின் சரியான திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதலின் மூலம் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடர் முழுவதும் சரியான பாதுகாப்பு வசதிகள், முன்னேற்பாடுகள் என அனைத்தையும் கச்சிதமாக செய்து பிசிசிஐ.

ipl trophy

பி.சி.சி.ஐ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பலத்தப்பட்ட தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்து தற்போது யோசிக்க துவங்கிவிட்டன. குறிப்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் நடத்த இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தற்போதே இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக ஒன்பதாவது அணியை இணைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியது. அதன்படி புதிதாக வரவுள்ள அணியை வாங்க பலர் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த அணியை வாங்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஹிந்தி நடிகர் சல்மான்கான், டாடா குழுமம் மற்றும் அதானி குழுமம் ஆகியோர் போட்டியிட வாய்ப்பிருக்கும் என்று கூறப்படுகிறது.

Mohan lal 1

ஏற்கனவே சில சீசன்களில் பத்து அணிகள் வரை வைத்து ஐபிஎல் தொடர் விளையாடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பீடு காரணமாக அடுத்த ஆண்டு நிச்சயம் ஐபிஎல் தொடரில் புதிதாக ஒரு அணி சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அந்த அணி நிச்சயம் அகமதாபாத் நகரை தலைமையாகக் கொண்டு உருவாக்கப்படும் என பிசிசிஐ நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

motera

ஏனெனில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மைதானத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும் இந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பீடுகளை சரி செய்யும் நோக்கிலும் புதிய அணி வர அதிக வாய்ப்பு உள்ளது என பிசிசிஐ நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.