ஐ.பி.எல் நிச்சயம் குறிப்பிட்ட இந்த மாதங்களில் நடைபெறும். அதுவும் ரசிகர்கள் மத்தியிலேயே நடைபெறும் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

IPL-1
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சமூக தொற்றாக கொரோனா பரவுவதை தடுப்பதற்காக வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளும், கிரிக்கெட் போட்டிகள் என அனைத்துமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் ரத்தாகி உள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளையும் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Ipl cup

- Advertisement -

அந்த அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்றே தோன்றுகின்றது. நிலைமை சீரடைந்து பிறகு கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் சீசன் தாமதமாக தொடங்கப் பட நேர்ந்தால் குறைவான போட்டிகளை வைத்து இந்திய வீரர்களை மட்டும் வைத்து அதாவது வெளிநாட்டு வீரர்களை ஆட வைக்காமல் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து இந்த ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த அக்டோபர் 18ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஐபிஎல் நடத்தலாம் என்பது போன்ற கருத்துகள் உலா வருகின்றன.

CskvsMi

இப்படி ஆளுக்காள் ஒரு ஐடியா கொடுத்து வரும் நிலையில் ஐபிஎல் குறித்து தற்போது பல செய்திகள் உலா வருகின்றன. ஆனால் ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அணிகளின் உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி (ஏப்ரல் 15ஆம் தேதி) ஆலோசனை செய்த பின்னர் தான் ஐபிஎல் குறித்து எந்தவித திடமான முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல் ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே ஐபிஎல் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பிசிசிஐ நடத்தத் திட்டமிட வாய்ப்புள்ளது என்றும் ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. இந்நிலையில் ஐபிஎல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

csk

ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் நடத்தப்பட மாட்டாது என்பது ஏற்கனவே பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது. எனவே நிச்சியம் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தான் போட்டி நடைபெறும் என்றும் அதற்கான அதற்கான சூழல் மற்றும் மத்திய அரசின் ஒப்புதல் இருப்பின் முறைப்படி அறிவிக்கப்பட்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஐ.பி.எல் நடத்த வாய்ப்புள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பின் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement