ஐ.பி.எல் நடத்த வேற எடமே கிடைக்கலையா ? பி.சி.சி.ஐ யின் புதிய முடிவால் – கொந்தளிக்கும் ரசிகர்கள்

staripl

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர்களின் மத்தியில் இந்த தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக தற்போது வரை 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த 13ஆவது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Ipl cup

இந்நிலையில் இந்த தொடரை எப்படியாவது திட்டமிட்டபடி நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஏனெனில் இத்தொடர் நடை பெறாமல் போனால் 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி இந்த வருடம் நிறைவடைவதற்குள் ஐபிஎல் நடந்தே தீரும் என்று மும்முறமாக தொடர்ந்து வேலைகளை செய்து வருகிறார்.

ஆனால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் முடிவை பொறுத்தே இந்த தொடர் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அனைவரும் கூறி வருகின்றனர். அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல் நடைபெறுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக பிசிசிஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.

CskvsMi

அதன்படி அவர் வெளியிட்டுள்ள தகவலில் : டி20 உலகக்கோப்பை நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டால் அந்த கால நேரத்தை பயன்படுத்தி ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் நடத்தப்படும். மேலும் ஐபிஎல் தொடரை இந்தியாவின் பல்வேறு மைதானங்களிலும் நடத்தாமல் ஒரு குறிப்பிட்ட நகரத்தை தேர்ந்தெடுத்து அங்கு நடத்தலாம் என்று ஒரு யோசனை உள்ளது.

- Advertisement -

அதன்படி மும்பையில் நான்கு பெரிய மைதானங்கள் உள்ளதால் அந்த நான்கு மைதானத்தில் மட்டும் ஐபிஎல் தொடரை நடத்த நாங்கள் ஆயத்தம் செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்டபடி ஐபிஎல் தொடர் நடத்த மும்பை பாதுகாப்பான நகரம் அல்ல ஏனெனில் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பெரும்பங்கு மும்பையில் தான் உள்ளது.

csk-vs-mi

அதாவது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா திகழ்கிறது. எனவே அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தவறான முடிவுதான் அதை தவிர்த்து பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் அழுத்தமான கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.