சேப்பாக்கத்திற்கு இணையான மைதானம் சேலம் நகரில் அறிமுகம் – விவரம் இதோ

IND-3
- Advertisement -

சென்னை திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து தற்போது சேலத்திலும் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது .

salem

- Advertisement -

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைபட்டியில் சேலம் கிரிக்கெட் அகாடமி சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்தி 5000 சதுர அடியில் புதிதாக இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானம் சர்வதேச தரத்திலான கிரிக்கெட்டிற்க்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மைதானத்தை தொடங்கி வைத்து பேசிய ராகுல் ட்ராவிட் பேசியதாவது : சிறு சிறு நகரங்களில் கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்படுவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து தான் வர உள்ளார்கள். இந்த மைதானம் கிராமத்தில் உள்ள கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது .

salem 2

அந்த இளைஞர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சேலத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் நடராஜன் இங்கு உள்ள இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார். இவ்வாறு பேசினார் ராகுல் டிராவிட்.

Ground

இந்த மைதானத்தில் ராகுல் டிராவிட் பந்துவீச தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டிங் செய்து அசத்தினார். மேலும் இந்த மைதானம் ஐ.பி.எல் தொடருக்கான போட்டிகளிகளின் வரைமுறைக்கு உட்படும் வேண்டும் தகவல் வெளியாகியுள்ளன.#

Advertisement