ரசிகர்கள் யாரும் வேண்டாம். வெறும் 22 பிளேயர்ஸ் 2 அம்பயர் மட்டும் போதும் – ஐ.பி.எல் தொடருக்கு வந்த சோதனை

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போது பதிமூன்றாவது சீசனாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ள நிலையில் இப்போதே அதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ipl

- Advertisement -

மேலும் இதற்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு புதிய சிக்கல் கொரோனா வைரஸ் ஒரு புதிய பாதிப்பை ஏற்படுத்த உள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி சீனாவில் உருவான வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

சீனா ஹாங்காங் போன்ற நாடுகளில் பரவி வந்த வைரஸ் தற்போது படிப்படியாக உலகம் முழுவதும் பரவத் துவங்கியுள்ளது. உலகம் முழுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரசால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இந்தியாவிலும் சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் வெளியான பின் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் மத்திய அரசு சார்பாக ஐபிஎல் போட்டியை தள்ளிவைக்க கோரி கோரிக்கையும் வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துவிட்டது ஆனாலும் ஒருபக்கம் போட்டியை நடத்தியாக வேண்டும் என்று முதலீட்டாளர்கள் விரும்புவதால் புதிய ஐடியா ஒன்றினையும் அவர்கள் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

அதன்படி ஐபிஎல் போட்டிகளை க்ளோஸ் கிரௌண்ட் மேட்ச் போல நடத்தலாம். அதாவது ரசிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் இரு அணி வீரர்கள் மற்றும் நடுவர்களை மட்டுமே வைத்து போட்டியை நடத்தலாம். இதன்மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். ரசிகர்களை மைதானத்திற்கு வரவிடாமல் இப்படி போட்டியை நடத்துவதன் மூலம் அனைவரும் டிவியின் மூலம் போட்டியை கண்டு களிப்பார்கள்.

preity-zinta

அதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் மேலும் ரசிகர்களுக்கும் எந்த வித வைரஸ் தொற்றும் ஏற்படாது என்பதால் இந்த புதிய ஐயாவின் அவர்கள் கொடுத்துள்ளனர். இருந்தாலும் இந்த ஐடியா எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement