IPL : ஐ.பி.எல் போட்டிகள் துவங்கும் நேரத்தினை மாற்றிய ஐ.பி.எல் நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் தற்போது 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் நடந்துவருகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்குபெற்று ஆடிவரும் இந்தத்தொடர் மொத்தம் 60 போட்டிகளை கொண்டது. தற்போதுவரை 45 போட்டிகள்

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் தற்போது 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் நடந்துவருகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்குபெற்று ஆடிவரும் இந்தத்தொடர் மொத்தம் 60 போட்டிகளை கொண்டது. தற்போதுவரை 45 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை அணி 12 போட்டிகளில் 8 போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி கடைசி இடத்தில் உள்ளது.

IPLNSG

- Advertisement -

வழக்கமாக வார நாட்களில் இரவு 8 மணிக்கும், வாரஇறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு ஒருபோட்டியும், இரவு 8 மணிக்கு ஒருபோட்டியும் நடைபெறும். இந்நிலையில் போட்டிகள் தொடங்கும் நேரத்தை ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றியுள்ளது. அதனை ஐ.பி.எல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக முறைப்படி அறிவித்தது.

அதன்படி பிளேஆப் சுற்றில் மூன்று போட்டிகளும், இறுதி போட்டியும் துவங்கும் நேரத்தை ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. அதன்படி வழக்கமாக போட்டி துவங்கும் நேரத்திற்கு முன்கூட்டியே அரைமணி நேரம் முன்பாக போட்டிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒரு போட்டி முடிய இரு அணிகளும் 3 மணி நேரம் 20 நிமிடம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி.

Ipl opening

ஆனால், தற்போது போட்டிகள் நடைபெறும் நேரம் சில போட்டிகளில் அதிகமாகிறது. அதனால் போட்டிகள் நள்ளிரவு வரை செல்கின்றன. இதனை தவிர்க்கவே ஐ.பி.எல் நிர்வாகம் இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், போட்டிகள் முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ரோஹித், ரஹானே மற்றும் கோலி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement