கொரோனா பாதிப்பினால் ஐ.பி.எல் தொடரின் பரிசுத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – முதல் பரிசு எவ்வளவு தெரியுமா ?

ipl
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? நடைபெறாதா ? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் கங்குலி தலைமையிலான பிசிசிஐ நிர்வாகம் அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளது. இன்று நடைபெறும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரேயான இறுதிப் போட்டியுடன் இந்த வருட ஐபிஎல் தொடர் இனிதே நிறைவடைய இருக்கின்றது.

Ganguly

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் இந்தியாவில் நடத்தாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுவதால் நிர்வாகத்திற்கு ஏகப்பட்ட செலவுகள் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய பணக்கார டி20 தொடர் என்றால் அது ஐபிஎல் தொடர் தான். கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுத்து அணி வீரர்களை ஏலத்தில் எடுத்து விளையாடப்படும் இந்த தொடரில் பரிசுத்தொகையாக பெரிய தொகை வழங்கப்படும்.

கடந்த சீசன் வரை முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 20 கோடி வழங்கப்படும். ஆனால் இம்முறை கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு முதலிடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடி ரூபாய்தான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிசிசிஐக்கு இந்த ஆண்டு அதிக வருமானம் கிடைக்கவில்லை என்பதாலும், வெளிநாட்டில் தொடர் நடத்தப்படுவதால் ஏகப்பட்ட செலவுகள் ஏற்பட்டதன் காரணமாகவும் இந்த பரிசு தொகை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மட்டுமின்றி இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ரூபாய் அளவில் இருந்து 6.25 கோடி ஆகவும் பரிசு தொகை குறைக்கப்பட்டுள்ளது.

Rahul

அதுமட்டுமின்றி ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப், எமர்ஜிங் பிளேயர் போன்ற விருதுகளுக்கு எவ்வளவு ரூபாய் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகவில்லை. அது இன்று இரவே தெரியவரும் ஆனால் கடந்த முறை வரை இந்த விருதுகளுக்கெல்லாம் 10 லட்சம் ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement