எதப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். நாங்க இருக்கோம். வெளிநாட்டு வீரர்களுக்கு ஆறுதலாக – ஐ.பி.எல் நிர்வாகம் அறிக்கை

Ipl-batsman
- Advertisement -

11வது ஐபிஎல் தொடர் தற்போது பாதுகாப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா அச்சம் காரணமாக வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர். இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்திற்கு ஆதரவாக தற்பொழுது தான் இருக்க வேண்டும், என்று கூறி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.

ipl-2021

- Advertisement -

அதேபோல ஆஸ்திரேலிய வீரர்கள் அன்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் கொரனோ அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி தங்களது நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். ஒரு சில வீரர்கள் ஐபிஎல் தொடர் முடியும் வரை இங்கேயே இருந்து விளையாட போவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தொடர் முடிந்து எப்படி தங்களுடைய நாட்டுக்கு செல்வது என்கிற கேள்வி அவர்களுக்கு எழுந்துள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களை, அந்தந்த நாடுகள் தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது. இப்படி இருக்கும் வேளையில் எப்படி நாங்கள் எங்களுடைய நாட்டுக்கு தொடர் முடிந்ததும் திரும்பி செல்வது, என கேள்வி எழுப்பியுள்ளனர்.

zampa

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிசிசிஐ தற்போது ஒரு அறிக்கையை விட்டுள்ளது. உங்கள் அனைவரது அச்சமும் எங்களுக்கு நன்றாகத் தெரிகிறது. உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம். நீங்கள் தொடர் முழுவதும் மிகப் பாதுகாப்பாக எப்படி விளையாண்டு கொண்டு இருக்கிறீர்களோ, அதேபோல் தொடர் முடிந்தவுடன் உங்களுடைய நாட்டுக்கு உங்களை பத்திரமாக வழி அனுப்ப வேண்டியது எங்களுடைய கடமை.

மத்திய அரசுடன் இணைந்து இது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம், நீங்கள் அதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். உங்களை நாங்கள் பத்திரமாக உங்களுடைய நாட்டுக்கு வழியனுப்பி வைப்போம். அதற்கு நாங்கள் உத்தரவாதம், என இறுதியாக பிசிசிஐ தரப்பில் ஹேமங் அமின் நேற்று கூறியுள்ளார்.

Advertisement