போய் சர்கஸில் சேந்துக்கோங்க.. இங்கிலாந்து வீரர்கள் கெட்டுப்போக இந்தியா தான் காரணம்.. ஃஜெப்ரி பாய்காட் விளாசல்

Geoffry Boycott
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடர் ஜூலை 10ஆம் தேதி லண்டனில் துவங்கியது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.

ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி வெற்றி காண்போம் என்று சொன்ன இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதன் பின் சுதாரித்த இந்தியா அதிரடியாக விளையாடுவோம் என்று சொன்ன இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

- Advertisement -

சர்க்கஸ் இல்ல:
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணத்தால் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை மறந்து கெட்டுப் போய்விட்டதாக முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் விமர்சித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவோம் என்று அடம் பிடித்தால் பேசாமல் சர்கஸில் சேர்ந்து கொள்ளுமாறும் அவர் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை கடுமையாக சாடிள்ளார்.

இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து சுமாராக விளையாடியது. இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எங்களுடைய சராசரி டெஸ்ட் வீரர்களை பணக்காரர்களாக உருவாக்கியுள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவில் நன்றாக துவங்கிய இங்கிலாந்து கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் அடித்து நொறுக்கப்பட்டது”

- Advertisement -

“கடந்த குளிர்காலத்தில் இந்தியாவில் எங்களுடைய வீரர்களில் சிலர் ஈகோ மற்றும் தற்பெருமை ஆகியவற்றை சிறப்பாக செய்தனர். அவர்கள் வேகமாக ரன்கள் அடிப்பது, ரசிகர்களை பரவசப்படுத்துவது எப்படி என்ற கருத்துக்களுடன் வெளியே வந்தனர். இவை பாராட்டத்தக்கவை. அதற்காக அவர்கள் தோல்வியை சந்தித்திருக்கக் கூடாது. ஏனெனில் தோல்வியை சந்திப்பதில் வேடிக்கை கிடையாது”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை தோல்வியின் எதிரொலி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனிந்து ஹசரங்கா – விவரம் இதோ

“டெஸ்ட் போட்டிகள் ஒரு கண்காட்சி கிடையாது. ஒருவேளை அதில் வெற்றி பெறும் முடிவு முக்கியமல்ல என்று நம்முடைய வீரர்கள் நினைத்தால் பின்னர் அவர்கள் சர்க்கஸில் சேர்ந்து கொள்ளலாம். அங்கே தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் சிரித்து வேடிக்கையாக இருக்கலாம்” என்று கூறினார். முன்னதாக சொந்த மண்ணில் நடந்த 2021, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு கூட இங்கிலாந்து தகுதி பெற

Advertisement