- Advertisement -
ஐ.பி.எல்

அம்பயர்களின் தவறை சரிசெய்ய வரவிருக்கும் புதிய திட்டம் – இதுவும் சூப்பரா இருக்கே

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டி20 போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரை சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக பவர் பிளேயர் என்ற புதிய முறையை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் நடுவர்களின் தவறான தீர்ப்புகளால் போட்டியின் முடிவுகள் மாறியதை நாம் கண்டோம்.

அதுவும் குறிப்பாக மும்பை அணி வீரர் மலிங்கா வீசிய நோபாலை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தோனி கோலி ஆகியோர் களத்தில் இறங்கி அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது நாம் சென்ற வருட ஐபிஎல் தொடரில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இது மாதிரி தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக ஐ.பி.எல் நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

- Advertisement -

அதன்படி தற்போது டிவி நடுவர் மற்றும் களத்தில் உள்ள அம்பயர் தவிர தற்போது நோபால் கவனிப்பதற்கு என தனியாக ஒரு அம்பயரை ஐபிஎல் கிரிக்கெட்டில் நியமிக்க இருக்கிறார்களாம் அதாவது போட்டி நடந்து கொண்டிருக்கும் போது களத்திலுள்ள நடுவர்கள் மற்றும் டிவி அம்பயர் தவிர்த்து மேலும் ஒரு அம்பயரை நோபால்களை கவனிப்பதற்காகவே தனியாக நியமிக்கப் போகிறார்களாம்.

இதன்மூலம் முக்கியமான கட்டத்தில் நோபால்கள் மூலம் விக்கெட்டுகள் விழுவது, அம்பயர்கள் தவறான தீர்ப்புகள் கொடுப்பது போன்றவை தவிர்க்கப்படும் என்பதால் இந்த புதிய திட்டத்தை இந்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

- Advertisement -
Published by