வரும் சனிக்கிழமை முதல் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்படவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டாண்டு தடைக்கு பின்னர் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடப்போகும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் சென்ற வருடம் வரையிலும் சோனி நிறுவனம் வைத்திருந்த ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரம்மாண்ட தொகை கொடுத்து இந்தாண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. எனவே இந்த ஆண்டு முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை கண்டுகளிக்கலாம்.
ஐபிஎல் என்றாலே பிரம்மாண்டம் மற்றும் மனதை கவரும் வகையில் நடத்தப்படும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதொரு கிரிக்கெட் தொடர்.சியர்ஸ் கேர்ள்ஸ் தொட்டு போட்டிகளை தொகுத்து வழங்கிடும் வர்ணனையாளர் தொடங்கி அனைவரும் அழகிலும் அறிவிலும் சளைத்தவர்கள் அல்ல.அதிலும் போட்டிகளை தொகுத்து வழங்கிடும் வர்ணனையாளர்கள் தங்கள் அழகுடன் கூடிய பேச்சுத்திறனில் ரசிகர்களை கட்டிப்போடுபவர்ள் என்பதில் சந்தேகமேயில்லை.
அந்தவகையில் இந்த ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கப்போகும் அழகு தேவதைகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
ரோச்சல் ராவ்.
சென்னையை சேர்ந்த ரோச்சல் ராவ் தமிழ்,ஆங்கிலம்,இந்தி என பல மொழிகளில் ஆளுமை திறன் கொண்ட வர்ணனையாளர். கடந்த 2015ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் 2012ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர்.
இஷா தாரா.
கடந்த 2016ம் ஆண்டுமுதல் ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கிடும் இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண். முழு நேர தொகுப்பாளரான இவர் இந்த ஐபிஎல்-இல் சிறப்பாக தொகுத்து வழங்க உள்ளார்.
மயாந்தி லாங்கர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான இவர் மாடலிங்கில் அசத்திவருபவர்.இவர் கிரிக்கெட் மட்டுமில்லாமல் அனைத்து விளையாட்டுகளையும் அலசி ஆராய்ந்து தொகுத்து வழங்கும் சிறப்பு கொண்டவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவன தொகுப்பாளரான இவரை இந்த ஐபிஎல் முதல் காணலாம்.
பல்லவி ஷர்தா.
பாலிவுட் நடிகையான இவரை இந்த ஐபிஎல் முதல் தினமும் ஐபிஎல் தொகுப்பாளினியாக காணலாம். இந்தாண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கிட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
அர்ச்சனா விஜயா.
மாடலிங் துறையில் கலக்கி வரும் இவர் சில விளம்பர படங்களிலும் நடத்தி வருகின்றார். 2011ம் ஆண்டு முதலே ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கிடும் அனுபவம் வாய்ந்த இவரும் இந்த ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கிட உள்ளார்.