என்னுடைய இந்த வெறித்தனமான பேட்டிங்க்கு இதுதான் காரணம் – இங்கிலாந்து வீரர் சவுக்கடி பதில்

Jonny Bairstow ENg vs NZ
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளின் முடிவில் 2 – 0* என்ற கணக்கில் இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் 2-வது போட்டி ஜூன் 10 – 14 வரை நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் அபாரமாக செயல்பட்டு 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 190 ரன்களும் டாம் ப்ளன்டல் 106 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Darll Mitchell ENG vs NZ Tom Blundell Motty Potts

- Advertisement -

அதை தொடர்ந்து நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் சிறப்பாக பேட்டிங் செய்த இங்கிலாந்தும் 539 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஓலி போப் 145 ரன்களும் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 176 ரன்களும் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்தை 2-வது இன்னிங்சில் பெரிய ரன்களை எடுக்க விடாமல் மடக்கிப் பிடித்த இங்கிலாந்து 284 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மீண்டும் டார்ல் மிட்சேல் 62* ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஜானி மாஸ்:
இப்படி 3 இன்னிங்ஸ் முடிந்து 299 ரன்கள் என்ற இலக்கு தெரிவதற்கு நான்கரை நாட்கள் முடிந்த காரணத்தால் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்று 99% ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார் போல் ஜாக் கிராவ்லி 0, ஓலி போப் 18, ஜோ ரூட் 3, லீஸ் 44 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஏமாற்றியதால் 93/4 என தடுமாறிய இங்கிலாந்து தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை விடாமல் நிதானமாகவும் அதன்பின் அதிரடியாகவும் பேட்டிங் செய்தனர்.

Jonny Bairstow Ben STokes

5-வது விக்கெட்டுக்கு 179 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் வெறும் 77 பந்துகளில் சதமடித்து 14 பவுண்டரி 7 சிக்சருடன் 136 (92) ரன்களை 147.83 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் குவித்த ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 இன்னிங்ஸ் ஆடி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் பென் ஸ்டோக்ஸ் 75* (70) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்ததால் 299/5 ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சரித்திர வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக தேனீர் இடைவெளிக்குப்பின் 30 ஓவர்களில் 160 ரன்கள் தேவைப்பட்ட போது அதை ஓவருக்கு 10 ரன்கள் வீதம் டி20 போல வெறும் 16 ஓவர்களில் எட்டிப்பிடிக்க உதவிய ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

IPL 2022 (2)

குறைக்கூறும் இங்கிலாந்தினர்:
அதனால் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது டெஸ்ட் பயணத்தை இங்கிலாந்து வெறித்தன வெற்றிகரமாக துவங்கியுள்ளது. முன்னதாக கடந்த 2008இல் துவங்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடர் சர்வதேச கிரிக்கெட்டின் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளின் அழிவுக்கு காரணமாக அமைகிறது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருசில முன்னாள் வீரர்களும் வல்லுனர்களும் சமீபகாலங்களில் இந்தியாவை குற்றம் சாட்டியிருந்தனர். அதிலும் ஐபிஎல் தொடருக்காக தங்களது நாட்டு வீரர்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணிப்பதே சமீப காலங்களில் இங்கிலாந்து டெஸ்ட் அணி பதிவு செய்த தொடர் தோல்விகளுக்கு காரணம் என்றும் அவர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர்.

- Advertisement -

சவுக்கடி பதில்:
இந்நிலையில் இந்த 2-வது போட்டியில் கடைசி நேரத்தில் தில்லாக பேட்டிங் செய்து வெற்றி பெறுவதற்கு ஐபிஎல் தொடரில் விளையாடி அனுபவம்தான் உதவி செய்தது என்று ஜானி பேர்ஸ்டோ கூறியுள்ளார். இதுபற்றி இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் என்னை ஐபிஎல் தொடரில் விளையாடாமல் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுமாறு கூறினார்கள். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக 4 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சிறப்பானது என்றாலும் தற்போதைய உலகில் உள்ள கிரிக்கெட் அட்டவணைகளின் படி அது நடக்காது”

இதையும் படிங்க : IND vs RSA : எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர் – வெளியான உறுதி தகவல்

“ஐபிஎல் தொடரில் தரமானவர்களுக்கு எதிராக நீங்கள் விளையாடும் வாய்ப்பு இங்கே கிடைக்காது. அங்கு விளையாடுவதால் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி அடிக்கடி நம்மை மாற்றி கொண்டு விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள முடிகிறது” என்று கூறினார். இது ஐபிஎல் தொடரை குறை கூறியவர்களுக்கு சவுக்கடியாக அமைந்த பதிலாக இருப்பதுடன் ஐபிஎல் என்பது எந்த அளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்து வந்துள்ளது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது என்றே கூறலாம்.

Advertisement