IND vs RSA : எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர் – வெளியான உறுதி தகவல்

Markram
- Advertisement -

தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி துவங்கிய இந்த தொடரானது தற்போது மூன்று போட்டிகளை நிறைவு செய்துள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ள இவ்வேளையில் நான்காவது டி20 போட்டி நாளை ஜூன் 17ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

INDvsRSA

- Advertisement -

அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஐந்தாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரரான எய்டன் மார்க்கம் விளையாட மாட்டார் என்றும் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தியா வந்திருந்த மார்க்ரம்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காமல் இருந்து வந்தார். முதல் மூன்று போட்டிகளிலும் இடம் பெறாத அவர் தற்போது எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

Aiden Markram

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பான பார்மில் இருந்த அவர் சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங்கில் அதிரடி காட்டியதோடு மட்டுமின்றி பகுதி நேர பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வந்தார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தும் மார்க்கம் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் விளையாடாதது அவர்களுக்கு ஒரு இழப்பு தான் என்று கூறலாம்.

- Advertisement -

இருப்பினும் தற்போது உள்ள இளம் இந்திய அணியை அனுபவம் வாய்ந்த தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகளில் வீழ்த்தி உள்ளதால் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தெம்பா பவுமா தலைமை ஏற்றதில் இருந்து தெ.ஆ அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மனம்நொந்து ராகுல் திவாதியா பதிவிட்ட கருத்து – ரசிகர்கள் ஆறுதல்

அதே வேளையில் மூன்றாவது போட்டியில் வெற்றியை ருசித்த இந்திய அணியானது எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement