இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மனம்நொந்து ராகுல் திவாதியா பதிவிட்ட கருத்து – ரசிகர்கள் ஆறுதல்

Tewatia
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 19ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த தொடருக்கு அடுத்து இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக வெளியிட்டது. முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி டிராவிட் தலைமையில் இங்கிலாந்து பயணிக்க இருப்பதனால் லட்சுமணன் பயிற்சியின் கீழ் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு 17 வீரர்களை கொண்ட இந்திய அணியானது நேற்று அறிவிக்கப்பட்டது.

Tewatia 1

இந்த தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று காயத்திலிருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாதவும் அணியில் இணைந்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவாதியாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் ராகுல் திவாதியா வாய்ப்பினை பெறுவார் என்றே பலரும் நினைத்திருந்தனர்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக ராகுல் திவாதியா திகழ்ந்தார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் திவாதியா இந்த ஆண்டு குஜராத் அணிக்காக முழுக்க முழுக்க ஒரு பினிஷராக இருந்து அந்த அணிக்கு குறிப்பிடத்தக்க பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணியின் தேர்வுக்குழு அவரை இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பினை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்திய அணியில் ராகுல் திவாதியாவை ஏன் சேர்க்கவில்லை என்றும் ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராகுல் திவாதியா இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : “எக்பெக்டேஷன் ஹர்ட்ஸ்” (Expectations Hurts) அதாவது எதிர்பார்ப்புகள் காயப்படுத்துகின்றன என்று அவர் வருத்தத்துடன் இருக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த பதிவினை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : ராகுல் திரிப்பாதிக்கு சேன்ஸ் குடுத்ததுலாம் ஓகே. ஆனா இவருக்கு ஏன் சேன்ஸ் தரல – ரசிகர்கள் கேள்வி

29 வயதான ராகுல் திவாதியா கடந்த 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 64 போட்டிகளில் விளையாடி 738 ரன்களை குவித்துள்ளார். அடிப்படையில் சுழற்பந்து வீச்சாளரான இவர் பேட்டிங்கிலும் அதிரடியான பினிஷிங்கை கொடுக்கும் வல்லமை படைத்த அவர் தற்போது மிகச்சிறப்பான பார்மில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement