ராகுல் திரிப்பாதிக்கு சேன்ஸ் குடுத்ததுலாம் ஓகே. ஆனா இவருக்கு ஏன் சேன்ஸ் தரல – ரசிகர்கள் கேள்வி

ind
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கு நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

IND vs RSA Chahal Axar Patel

- Advertisement -

இந்த தொடருக்கு முன்னதாக முதன்மை வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சென்று ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இளம் வீரர்களைக் கொண்ட இரண்டாவது அணியே விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐயின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் ஐபிஎல் தொடரில் அசத்திய சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதோடு காயத்தில் இருந்து திரும்பிய சூரியகுமார் யாதவும் அணியில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் குஜராத் அணிக்காக விளையாடிய ராகுல் திவாதியா ஐ.பி.எல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் அவரும் இந்த தொடரில் தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Rahul Tewatia 3

ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த 15வது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக இறுதிகட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவாதியா அருமையான பினிஷிங்கை வெளிப்படுத்தி பல வெற்றிகளை அந்த அணிக்கு பெற்றுத்தந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு கட்டாயம் இந்திய அணியில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்த வேளையில் மீண்டும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 17 பேர் கொண்ட இந்திய அணி இதோ :

இதையும் படிங்க : என்ன சும்மா டைம் பாஸ்க்காக விளையாடுகிறாரா? – விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து பாக் நட்சத்திரம் கேள்வி

1) ஹார்திக் பாண்டியா (கேப்டன்), 2) புவனேஷ்வர் குமார் (து.கேப்டன்), 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) இஷான் கிஷன், 5) சூரியகுமார் யாதவ், 6) தீபக் ஹூடா, 7) வெங்கடேஷ் ஐயர், 8) அக்சர் படேல், 9) யுஸ்வேந்திர சாஹல், 10) ரவி பிஷ்னாய், 11) சஞ்சு சாம்சன், 12) ராகுல் திரிப்பாதி, 13) ஹர்ஷல் படேல், 14) ஆவேஷ் கான், 15) தினேஷ் கார்த்திக், 16) உம்ரான் மாலிக், 17) அர்ஷ்தீப் சிங்

Advertisement