என்ன சும்மா டைம் பாஸ்க்காக விளையாடுகிறாரா? – விராட் கோலியின் மோசமான பார்ம் குறித்து பாக் நட்சத்திரம் கேள்வி

Kohli-1
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த பல வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக வலம் வருகிறார். காலம் காலமாக இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்து வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பின் அவரின் இடத்தில் அவரைப் போலவே முடிந்த அளவுக்கு தனது முழு திறமையை வெளிப்படுத்தி ரன்களை மழையாக பொழிந்த அவர் இந்தியாவிற்கு பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு ஒரு ரன் மெஷினாக அசால்ட்டாக சதங்களை அடித்த அவர் 31 வயதிலேயே 70 சதங்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார்.

kohli 1

அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சுரேஷ் ரெய்னா போன்றவர்களை முந்தி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த அவர் இந்திய நவீன கிரிக்கெட்டின் அடையாளமாக உருவெடுத்தார். ஆனால் கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிராக 70தாவது சதமடித்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

சுமாரான பார்ம்:
இத்தனைக்கும் 2017 முதல் 3 வகையான இந்திய அணியுடன் சேர்த்து ஐபிஎல் தொடரில் பெங்களூருவை வழிநடத்திய அவரின் பேட்டிங்கை கேப்டன்ஷிப் அழுத்தம் பாதித்ததாக உணர்ந்த அவர் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு கடந்த ஜனவரி முதல் மீண்டும் சாதாரண வீரராக விளையாட துவங்கினார். ஆனாலும் எந்த மாற்றத்தையும் காணாத அவர் அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சீசனில் 3 கோல்டன் டக் அவுட்டாகி படுமோசமான பார்மில் மூழ்கினார். முன்பை விட அவரின் பேட்டிங்கிலும் ஆட்டத்திலும் பல வருடங்களாக ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு தெளிவாக தெரிந்தது.

kohli 1

அதனால் உடனடியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி ஒருசில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் திரும்புமாறு ரவிசாஸ்திரி உட்பட முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று விமர்சனங்களுக்கு பின் வாங்காத அவர் முழுமையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய போதிலும் கொஞ்சம் கூட முன்னேற்றத்தை காண முடியவில்லை. இத்தனைக்கும் இடையிடையில் அரை சதங்கள் அடிக்கும் அவரை அனைவரும் மோசமான பார்மில் இருப்பதாகவே கருதுகின்றனர்.

- Advertisement -

களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு இதற்கு முந்தைய காலகட்டங்களில் அசுரத்தனமாக செயல்பட்டு தனக்கென ஒரு தரத்தை அவர் உருவாக்கியுள்ளதே அதற்கு காரணமாகும். அந்த நிலைமையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்றுவரும் டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர் அடுத்ததாக வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பழைய பன்னீர் செல்வமாக சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Kohli-1

அப்ரிடி கேள்வி:
இந்நிலையில் அனைத்தையும் சாதித்து விட்டோம் என்று நினைப்பதால் விராட் கோலி இவ்வாறு சுமாராக செயல்படுகிறாரா என்று அவரின் பார்ம் பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது வெற்றி எனும் பசியுடன் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்று வெறித்தனமாக விளையாடிய விராட் கோலியை பார்த்த தமக்கு தற்போது நிறையவற்றை சாதித்து விட்டதால் பொழுதுபோக்கிற்காக விளையாடுபவராக அவர் தோற்றமளிக்கிறார் எனக்கூறும் சாகித் அப்ரிடி அவரின் அந்த எண்ணம் தான் சுமாரான பார்முக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் அணுகுமுறை மிகவும் முக்கியமானது. அதைத்தான் நான் அதிகம் பேசுகிறேன். தற்போது உங்களுக்கு கிரிக்கெட் மீது அணுகுமுறை இருக்கிறதா இல்லையா? ஏனெனில் விராட் கோலி தனது கேரியரின் தொடக்கத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் விளையாடினார். ஆனால் இன்னும் அதே உத்வேகத்துடன் கிரிக்கெட் விளையாடுகிறாரா என்பதுதான் பெரிய கேள்வி. அவரிடம் கிளாஸ் உள்ளது. ஆனால் தற்போது அவர் உண்மையாகவே நம்பர் ஒன்னாக இருக்க விரும்புகிறாரா? அல்லது வாழ்க்கையில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்து விட்டதாக நினைக்கிறாரா. அதனால் தற்போது ரிலாக்சாக டைம் பாஸ் செய்கிறாரா? இவை அனைத்தும் உங்களது அணுகுமுறையில் தான் உள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : கவலை வேண்டாம், கோப்பையை வெல்லப்போவது இவங்கதான் – இந்திய ரசிகர்களுக்கு பாக் ஜாம்பவான் ஆதரவு

அதாவது ஆரம்ப காலத்தில் சாதிக்க வேண்டும் என்று விளையாடிய விராட் கோலி தற்போது அதில் நிறைய இலக்கை எட்டிவிட்டதால் அந்த பழைய வெறியுடன் விளையாடுவதில்லை என்று கூறும் சாகித் அப்ரிடி அதுதான் அவரின் சதத்திற்கு தடையாக உள்ளதாக தெரிவிக்கிறார். எனவே அந்த பழைய அணுகுமுறையுடன் மீண்டும் விளையாடினால் விரைவில் நிச்சயம் அவரால் சதமடிக்க முடியும் என்றும் அஃப்ரிடி கூறுகிறார்.

Advertisement