இந்த ஐ.பி.எல் மூலம் இந்திய அணியில் விளையாடும் 3 வேகப்பந்து வீச்சாளர் ! ரவிசாஸ்திரி உறுதி !

Ravi-Sasthiri

ஐ பி எல் தொடர் தொடங்கி இதுவரை 11 சீஸின்களை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதலில் இது என்ன வென்று புரியாமல் இருந்த ரசிகர்களுக்கு போக போக இந்த ஆட்டத்தின் முக்கியத்துவம் புரியவந்தது. ஐ .பி. எல் சீஸின் மூலம் தான் பல்வேறு இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர் மேலும் அவர்கள் ஏற்கனவே ஐ. பி. எல் போட்டிகளில் ஆடி அனுபவம் பெறுவதால் இந்திய அணியில் ஆடும் போது புதிய வீரர்கள் என்ற பதட்டம் இல்லாமல் ஆடுகின்றனர்.

ravi sasthiri

இந்நிலையில் இந்திய அணியின் பயற்சியாளராக உள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கடந்த 10 ஆண்டுகளாக ஐ பி. எல் தொடர்களில் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரிக்கு அவரது கமண்ட்ரிக்கேன்றே தனி ரசிகர் பட்டாலங்களும் இருக்கின்றனர்.

தற்போது லோதா குழுவின் ஒரு சில கட்டுப்பாடுகள் காரணமாக இவர் ஐ பி எல் வர்ணனை பதவியிலிருந்து விலகி விட்டார். இருப்பினும் ஐ பி எல் தொடர்களில் ஆடிவரும் வீரர்களை கூர்ந்து கவனித்து வரும் ரவி சாஸ்திரி , இந்த ஐ பி எல் தொடர்களில் பார்க்கும் போது 2 ,3 வேக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர் .மேலும் சிறப்பாக பந்துகளை வீசி தங்களது திறமைகளை நிரூபித்துள்ளனர்.எனவே ஐ பி எல் முடிந்து இங்கிலாந்திற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் அவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ipl 2018

ஏற்கனவே ஐ பி எல் போட்டிகளின் மூலம் புவனேஸ்வர் குமார்,சஹால் போன்ற பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்தனர். ஆனால் இந்த சீசினில் குறிப்பாக சொல்லபோனால் சென்னை அணியின் தீபக் சஹர் என்ற இளம் வீரர் சிறப்பாக பந்து வீசி வருகிறார் எனவே இவர் இந்திய அணியில் விரைவில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -